கடக இராசியின் அதிபதி சந்திரன் ஆவார். வளர்பிறை சந்திரனாக தனது சொந்த வீட்டில் இருக்கப்பெற்றால் மிகுந்த சிறப்பாகும். தன் சொந்த வீட்டில் நின்ற சந்திரனால் உண்டாகும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :
கம்பீரமான மற்றும் அழகான தோற்றம்
கொண்டவர்கள்.
சிந்தனை வளம் மிகுந்தவர்கள்.
எண்ணியதை நிறைவேற்றும் மன தைரியமும்,
காரியச் செயலையும் கொண்டவர்கள்.
எந்த விதமான பிரச்சனையையும்
விரும்பாதவர்கள். சில நேரங்களில் அகப்பட்டாலும் எளிதில் தப்பித்து விடுவார்கள்.
தங்களின் கருத்துகளுக்கும்,
எண்ணங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்கள்.
பிறரின் ஆலோசனைகளை கேட்டாலும் முடிவுகள்
இவரின் விருப்பப்படியே இருக்கும்.
இறைப் பணிகள் செய்வதற்கு விருப்பம்
உடையவர்கள்.
மனைவியின் மீது மிகுந்த அன்பும், நேசமும்
கொண்டவர்கள்.
அனைத்து விதமான துறைகளை பற்றிய ஞானம்
கொண்டவர்கள்.
நினைவு திறன் அதிகம் கொண்டவர்கள்.
வஞ்சித்த வரை நேரம் பார்த்து வஞ்சிக்க கூடியவர்கள்.
ஒரு செயலை செய்வதற்கு முன் பலமுறை
சிந்தித்த பின்னே நடைமுறைப்படுத்துவார்கள்.
தனது முடிவுகளில் எந்நிலையிலும் மாற்றம்
செய்யாதவர்கள்.
சின்ன விஷயங்களில் கூட கவனம்
செலுத்தக்கூடியவர்கள்.
இவர்களின் வாதங்களை வெல்வது என்பது சிறிது கடினம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக