மன்னரிடம் சில காலம் தெனாலிராமன் அமைச்சராக இருந்தபொழுது, தெனாலிராமனை எப்போதுமே மன்னர் தன்னுடனே வைத்துக் கொண்டு உரையாடி மகிழ்வார். மன்னர் உணவருந்தும் சமயத்தில் தெனாலிராமனையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார்.
ஒருநாள் மன்னரும் தெனாலிராமனும்
வழக்கம் போல அருகருகே அமர்ந்து உணவருந்தினார்கள். அப்போது மன்னர் தெனாலிராமனை
நோக்கி, தெனாலிராமன் உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று நான்
நினைக்கிறேன். நீர் என்ன நினைக்கிறீர்? என்று கேட்டார்.
தெனாலிராமன் ஆமாம் மன்னர் அவற்றையே நானும் நினைக்கிறேன் என்றார். உடனே மன்னர்
சமையற்காரனை அழைத்து, இனிமேல் அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன்
சேர்ந்து விடு என்று உத்திரவிட்டார். நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக்
கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது.
அன்றைய தினம் இருவரும் சாப்பிட்டுக்
கொண்டிருக்கும்போதும் பீன்ஸ் பரிமாறப்பட்டது. மன்னர் தெனாலிராமனை நோக்கி
உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்று தான் நினைக்கிறேன். நீர் என்ன
நினைக்கிறீர்? என்று கேட்டார். ஆமாம் மன்னர் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
நான் அறிந்ததில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை
என்றார் தெனாலிராமன்.
என்ன தெனாலிராமன்? பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும்
சிறந்த காய் பீன்ஸ் என்றீர்கள். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே என்று
மன்னர் கேட்டார். தெனாலிராமன் சிரித்துக் கொண்டே மன்னர் அவர்களே! என்ன செய்வது?
நான் தங்களிடம் அல்லவா வேலை பார்க்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக