Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 30 செப்டம்பர், 2020

தயவு செய்து அண்ணனை சிறைக்கு அனுப்பிவிடுங்கள் அப்பா…. அடடே அண்ணன் தங்கச்சின்னா இப்படிதான் இருக்கணும்!

இணையத்தில் அண்ணன் தங்கைக்குள் சண்டை குறித்த பதிவு ஒன்று அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

வீட்டில் அண்ணன் தங்கை இருந்தால் அவர்களுக்குள் சண்டை வருவது இயல்பே. ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் சண்டையை எல்லாம் மறந்துவிட்டு பாசமழை பொழிவார்கள். ஆனால் இங்கு ஒரு தங்கையோ எப்படியாவது தன் அண்ணனை சிறைக்கு அனுப்பிவிடுமாறு தன் தந்தைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கிருஷ் பார்மர் என்பவர் தனது தங்கை தந்தைக்க்கு எழுதிய கடிதத்தின் புகைப்படத்தை இணையத்தில் பகிர அது இப்போது வைரலாக பரவி வருகிறது. அந்த கடிதத்தில் ‘மரியாதைக்குரிய அப்பா, க்ரிஷ் பார்மரை (அண்ணனை) தயவு செய்து சிறையில் அடைத்துவிடுங்கள். அவன் என்னை அடித்து துன்புறுத்துகிறான். அவன் என் மேல் குதிக்கிறான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவனை சிறையில் அடைத்துவிடுங்கள்.’எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக