Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 17 செப்டம்பர், 2020

அதிகமான வெயிட்டிங் லிஸ்ட்; கூடுதல் ரயில்கள் இயக்க திட்டம்!

 


இந்தியா முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் முன்பதிவுகள் அதிகரித்துள்ள வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக பல்வேறு 230 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு வழித்தடங்களில் ரயில் பயணத்திற்கான முன்பதிவு எக்கசக்கமாக அதிகரித்து வருவதால், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இதனால் அதிகமான காத்திருப்போர் பட்டியலில் பயணிகள் உள்ள வழித்தடங்களில் மேலும் சிறப்பு நகல் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இயங்கி வரும் சிறப்பு ரயில்களின் பெயரிலேயே நகலாக இயக்கப்படும் இந்த ரயில்கள் சிறப்பு ரயில்களுக்கு சில நிமிடங்கள் முன்னதாக புறப்படும் என கூறப்பட்டுள்ளது.


எதிர்வரும் 21ம் தேதி முதல் தொடங்கும் இந்த ரயில்சேவைகளுக்கு 10 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. அதேசமயம் சிறப்பு ரயில்கள் நிற்கும் அனைத்து நிறுத்தங்களில் இந்த நகல் ரயில்கள் நிறுத்தப்படாமல் சில முக்கிய நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பீகா – உத்தரபிரதேசம், டெல்லி – அமிர்தசரஸ் இடையே அதிகளவில் இயக்கப்படும் இந்த ஜோடி ரயில்கள் தென்னிந்தியாவில் எங்கும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக