Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 17 செப்டம்பர், 2020

எவ்ளோ நேரம்யா பணம் எண்ணுவ? டயர்டாகி தூங்கிய திருடன்! – அலேக்காய் தூக்கிய போலீஸ்!


ஆந்திராவில் வீடு ஒன்றில் திருட சென்ற திருடன் அங்கேயா குறட்டை விட்டு தூங்கி போலீஸில் மாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களை நடத்தி வந்த திருடன் சூரிபாபு. இவன்மீது பல்வேறு குற்ற செயல்கள் குறித்த வ்ழக்கு உள்ள நிலையில் கோக்கவரம் கிராமத்தை சேர்ந்த பைனான்சியர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி என்பவர் வீட்டில் திருட சென்றுள்ளார்.

ஸ்ரீநிவாஸின் அறைக்குள் புகுந்து கட்டிலுக்கு அடியில் பதுங்கியுள்ளார் சூரிபாபு. ஸ்ரீநிவாஸ் தூங்கியதும் பணத்தை திருட சூரிபாபு திட்டமிட்ட நிலையில் ஸ்ரீநிவாஸ் பணத்தை எண்ணி முடித்துவிட்டு தூங்க நள்ளிரவு நேரம் ஆகியுள்ளது. இதனால் டயர்டான சூரிபாபு கட்டிலுக்கு கீழேயே தூங்கியுள்ளார்.

அவரின் குறட்டை சத்தம் கேட்டு கீழே பார்த்த ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இதுகுறித்து போலீஸுக்கு தகவல் அளிக்க அங்கு விரைந்த போலீஸ் தூங்கி கொண்டிருந்த சூரிபாபுவை எழுப்பி கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக