Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 26 செப்டம்பர், 2020

குட்டிக்கதை... இது சிரிப்பதற்கான நேரம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------

சிரிப்பதற்கான நேரம்...!!

-----------------------------------------------


நோயாளி : டாக்டர்... இந்த ஆப்ரேஷன் எப்ப முடியும்?
டாக்டர் : இன்னும் செத்த நேரத்துல முடியும்
நோயாளி : எது நான் செத்த நேரத்துலயா?
டாக்டர் : 😬😬
-----------------------------------------------


பெண் வீட்டார் : என்னையா இது மாப்பிள்ளைக்கு முன்னாடியே கல்யாணம் ஆகி பையன் இருக்கானாமே?
தரகர் : நான் தான் முன்னாடியே சொன்னனே... மாப்பிள்ளை பையன் அழகா இருப்பான்னு.
பெண் வீட்டார் : 😠😠
-----------------------------------------------

சிரிக்கலாம் வாங்க... குட்டிக்கதை...!!
-----------------------------------------------

 

இரண்டு நண்பர்கள் ஒரு டீ கடைக்கு சென்றிருந்தனர். அப்போது அருகில் ஒருவர் போனில் பேசிக்கொண்டிருந்தார். ஸ்பீக்கர் ஆனில் இருந்ததால் மறுமுனையில் பேசிய அவர் மனைவியின் குரல் தெளிவாக கேட்டது.

ஏங்க நான் இப்போ ஷாப்பிங் மாலில் இருக்கேன். நான் சொன்னேனே... டிஜிட்டல் கேமரா... அது இங்க இருக்குங்க... இருபதாயிரம் விலைதான். வாங்கிக்கட்டுமா? வாங்கிக்கோ மா... அப்புறம் நான் கேட்டேனே... ஒரு வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலை ஒன்றரை லட்சம்... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்கோ...

ம்ம்ம் அப்புறம் ஒரு புடவை பாத்தேன்... விலைதான் அதிகமா சொல்றான்... விலைய பாக்காதம்மா... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்கோமா... ம்ம்ம் சரிங்க... அப்புறம் நாமா அன்னைக்கு பாத்தோமே... ஒரு கார்... அதுக்கு இப்போ ஆபர் போட்டிருக்காங்க... உங்க செக்கை கொடுக்கவா? ஓகே மா.. இதுக்கெல்லாம் என்கிட்ட கேக்கணுமா? உனக்கு பிடிச்சிருந்தா போதும்... ஓகேங்க... சீக்கிரம் வீட்டுக்கு வாங்க என்று கொஞ்சலாய் சொல்லிவிட்டு மறுமுனையில் போனை வைத்தாள் மனைவி...

இவரும் போனை சிரித்தபடியே வைத்துவிட்டு திரும்பினார்... ஒரே நாளில் இவ்ளோ ஷாப்பிங்கா என அந்த இரண்டு நண்பர்களும் பார்த்து கொண்டிருந்தனர்... பின் போனில் பேசிய நபர் இவர்களிடம் வந்து சிரித்தபடியே இவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.... யாரோட மொபைல்லுங்க இது? என்று...😂😂

-----------------------------------------------

விடுகதைகள்...!!

-----------------------------------------------


1. நோயின்றி நாளும் மெலிவாள், கோள் சொல்லி நாளும் கழிவாள். அவள் யார்?

விடை : நாட்காட்டியின் தாள்

2. மழைக்காலம் வந்தாலே மகராசி சங்கீதம் தான். அவள் யார்?

விடை : தவளை

3. அரை ஜான் மனிதனுக்கு வயிறு நிறைய முட்டை. அவன் யார்?

விடை : வெண்டைக்காய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!