Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 30 செப்டம்பர், 2020

ஸ்மார்ட் டிவி வாங்க ஐடியா இருக்கா: அப்போ இது கண்டிப்பா உங்களுக்குதான்!

சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட்டிவிகள் தேவை தற்போது பிரதான பயன்பாடாக மாறிவருகிறது. இந்த காலக்கட்டத்தில் ஏணைய திரைப்படங்களும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமிட்டிருக்கும் பயனர்கள் கவனிக்கத்தக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட் டிவி நிறுவனங்கள் உட்பட அனைத்து மின்னணு நிறுவனங்களும் சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் பெரும்பாலான ஸ்மார்ட்டிவிகள் பட்ஜெட் விலையிலேயே அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம்

ஸ்மார்ட் டிவி வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் சேவையால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். பட்ஜெட் விலையிலான சிறந்த ஸ்மார்ட் டிவிகள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஸ்மார்ட்டிவி வாங்குவதற்கு முன் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். நீங்கள் ஸ்மார்ட்டிவி பொருத்தப் போகும் ரூம்-ன் அளவு என்பது மிக அவசியம். ரூம் மற்றும் ஹால் அளவிற்கு ஏற்ப ஸ்மார்ட்டிவி கணித்து வாங்க வேண்டும்.

32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்

ஸ்மார்ட்டிவி என்றவுடன் பெரும்பாலானோர் தேர்வு 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடலே ஆகும். ஹால் போன்ற இடத்திற்கு 43 இன்ச் டிவியும் பெட் ரூம் போன்ற இடத்திற்கு 32 இன்ச் ஸ்மார்ட்டிவியும் வாங்க விரும்புகின்றனர்.

வால் மவுன்ட் விருப்பம்

ஸ்மார்ட்டிவியை வால் மவுன்ட் செய்ய விரும்பினால் அதற்கான கருவி வாங்குவதற்கு தனி விலை கொடுக்க வேண்டும். ஸ்மார்ட்டிவி வாங்கியவுடன் வீட்டுச்சுவற்றில் திரைபோல் அமைக்க வேண்டும் என மேலே ஏற்றி பொருத்திவிடக் கூடாது. நேருக்கு நேர் பார்க்கும்படி சரியாக அளவிட்டு பொருத்த வேண்டும். காரணம் பழையரக டிவிகளை இதுவரை டேபிள் மேல் வைத்தே பார்த்திருப்போம், திடீரென மேலே ஏற்றி பொருத்தி பார்க்கும் பட்சத்தில் கழுத்துவலி, கண் வலி உள்ளிட்டவை ஏற்படலாம்.

4கே எச்டிஆர் டிவி

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்று ஸ்ட்ரீமிங் செய்யும் வாடிக்கையாளர்கள் 4கே எச்டிஆர் டிவியை 55 அளவு அங்குலமோ அல்லது பெரிய அளவிலோ வாங்க விரும்பலாம். 55 அங்குல டிவி வாங்க விரும்பினால் க்யூஎல்இடி அல்லது ஓஎல்இடி கொண்ட சிறந்த தொழில்நுட்ப அம்சம் கொண்ட டிவியை வாங்கலாம்.

ரூ.12,999 என்ற விலை

ரூ.12,999 என்ற விலையில் 32 அங்குல டிவிகளை வாங்கலாம். எச்டி மாடல் தேர்வை வாங்கும்போது சியோமி எம்ஐ, ரியல்மி போன்ற நிறுவனங்கள் இந்த விலையில் ஸ்மார்ட்டிவிகளை வழங்குகிறது. ஆண்ட்ராய்ட் ஓஎஸ் தளங்களில் ஸ்மாரட்டிவிகளில் இயக்கப்படுகின்றன.

43 இன்ச் அங்குல டிவி

43 இன்ச் அங்குல டிவி வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.22,499 என்ற விலையில் இருந்து வாங்கலாம். எம்ஐ எல்இடி டிவி போன்ற நிறுவனங்கள் ரூ.25000-க்கு உள்ளான விலையில் ஸ்மார்ட்டிவிகள் வழங்குகின்றன.

ஹெச்டி, முழு ஹெச்டி, ஓஎல்இடி, க்யூ எல்இடி

டிஸ்ப்ளே வசதி ஹெச்டி, முழு ஹெச்டி, ஓஎல்இடி, க்யூ எல்இடி போன்ற வசதிகளில் கிடைக்கிறது. பேனலுக்கும் ஸ்மார்ட்டிவிகளுக்குமான அளவை கவனிக்க வேண்டியது அவசியம். எத்தனை வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி விஷன், அட்மாஸ், ஆண்ட்ராய்ட் வெர்சன், ஓடிடி அணுகல் உள்ளிட்டவைகளை கவனிக்க வேண்டும். அதோடு ஹேண்ட்ஸ் ஃப்ரீ கூகுள் அசிஸ்டென்ட், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், குரல் கட்டளை உள்ளதா என்பதையு் கவனிக்க வேண்டும், மேலும் எத்தனை போர்ட் வசதி ஸ்மார்ட்டிவிகளில் உள்ளது எனவும் கவனிக்கத்தக்க ஒன்று.

ஆன்லைன் விற்பனை தளம்

ஸ்மார்ட்டிவிகள் பல்வேறு சலுகைகளோடு ரிலையன்ஸ் டிஜிட்டல், பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் வழங்குகின்றன. ஆன்லைன் விற்பனை தளங்களில் டிவி வாங்கும் இரண்டு அல்லது மூன்று டிவிகளை டிக் செய்து மேலே கம்பேர் அதாவது ஒப்பிடு என்ற தேர்வு சில தளங்களில் இருக்கும் அதை கிளிக் செய்தும் எது சிறந்தது என பரிசோதித்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக