Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 16 செப்டம்பர், 2020

OnePlus Nord போனின் கம்மி விலை வேரியண்ட் விற்பனைக்கு ரெடி! எப்போ வாங்கலாம் தெரியுமா?

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனம் இறுதியாக அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் வேரியண்ட் மாடலை வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வேரியண்ட் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் மாடலை என்ன விலையில் எங்கு வாங்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இப்போது வரை, ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின், 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் வகைகள் மட்டுமே நமது நாட்டில் விற்பனைக்குக் கிடைத்தது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

நீண்ட கால காத்திருப்பிற்குப் பின்னர், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது என்று அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் மாடல் வெறும் ரூ .24,999, என்ற விலையில் வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் அமேசான் தளம் வழியாக விற்பனைக்குக் கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் வெறும் ரூ .24,999 என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ .27,999 என்றும், இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுக்கு ரூ .29,999 என்ற விலை அறிமுகம் செய்யப்பட்டது.

விற்பனை தேதி உறுதி

8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் மாடல் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அமேசான், ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் கடைகளில் கிடைக்கிறது. இருப்பினும், 6 ஜிபி ரேம் மாறுபாடு மட்டும் செப்டம்பரில் கிடைக்குமென்று நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி, ஒன்பிளஸ் நிறுவனம் இப்போது இறுதியாக ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விற்பனை தேதியை உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதிய கிரே ஆஷ்

இந்த ஒன்பிளஸ் நோர்ட் ப்ளூ மார்பிள் மற்றும் கிரே ஓனிக்ஸ் ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகிறது. அதேபோல், அக்டோபரில் புதிய கிரே ஆஷ் வண்ண விருப்பம் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக