Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 16 செப்டம்பர், 2020

வீட்டில் தோஷம் இருக்கு கழிக்கணும்… மந்திரவாதியின் நூதன திருட்டு!

சேலம் அருகே மந்திரவாதி என்ற போர்வையில் பெண் ஒருவரின் வீட்டில் கொள்ளை அடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சேலம் சூரிய மங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபு. இவர் மந்திரவாதி என சொல்லிக்கொண்டு ஊருக்குள் திரிந்துள்ளார். இவரை நம்பிய மொகராஜ் பேகம் என்ற பெண் தன் வீட்டுக்கு அழைக்க, வீட்டில் தோஷம் இருப்பதாக சொல்லி அதைக் கழிக்க சில பொருட்களை வாங்கி வர சொல்லி, கடைக்கு அனுப்பியுள்ளார்.


அவர் சென்றதும் வீட்டில் இருந்த
25 பவுன் நகையை திருடிச்சென்று விட்டார். நகைகளைக் காணாததால் அதிர்ச்சியடைந்த பேகம், மந்திரவாதி மேல் சந்தேகப்பட்டு அவரிடம் விசாரித்துள்ளார். அதைப்பற்றி தனக்கு தெரியாது என சொல்லிய பிரபு, மீறி தன்னைத் தொந்தரவு செய்வினை வைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.


இதையடுத்து அந்த பெண் போலீஸாரிடம் புகார் கொடுக்க, அவர்கள் பிரபுவைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது திருடியதை ஒப்புக்கொண்ட பிரபு அதை வைத்து பைக் மற்றும் நிலம் வாங்கியதாக சொல்லியுள்ளார். அவரிடம் இருந்து அவற்றை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக