இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப், மெசஞ்சர், கூகுள் சாட், ஸ்கைப் உள்ளிட்ட சமூக தளங்களைக் கண்காணிக்கக் கூடுதல் விதிமுறைகள் விதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை சமீபத்தில் எழுப்பப்பட்டது. இந்த கோரிக்கைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தற்பொழுது பதில் அளித்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் சீனாவின் டிக்-டாக், ஹலோ ஆப், வீ
சாட் போன்ற 100க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் முற்றிலுமாக மத்திய அரசின் ஆணைப்படி
தடை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது, பேஸ்புக், வாட்ஸ்அப், மெசஞ்சர்,
கூகுள் சாட், ஸ்கைப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கும் புதிய கட்டுப்பாட்டு
விதிமுறைகள் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை பரவலாக எழுப்பப்பட்டது.
பேஸ்புக், வாட்ஸ்அப், மெசஞ்சர், கூகுள் சாட், ஸ்கைப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள், வெறுக்கத்தக்கச் செய்திகள், அவதூறு செய்திகள் போன்றவை அதிகம் பகிரப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக டிராய் தற்பொழுது மத்திய அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.
டிராய் வெளியிட்டுள்ள தகவலின் படி, பேஸ்புக், வாட்ஸ்அப், மெசஞ்சர், கூகுள் சாட், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தளங்கள் ஏற்கெனவே பல்வேறு வகையில், பல்வேறு கண்காணிப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தான் செயல்பட்டு வருகின்றன, இவற்றைக் கட்டுப்படுத்த தற்பொழுது நடைமுறையில் உள்ள விதிமுறைகளே போதுமானது என்றும், இதற்கு மேல் புதிய விதிமுறைகள் எதுவும் தேவையில்லை என்றும் டிராய் கூறியுள்ளது.
தற்பொழுது இருக்கும் விதிமுறைகளுக்கு மேல் கூடுதலாக புதிய விதிமுறைகள்
செயல்படுத்தப்பட்டால், அது சமூக வலைத்தளங்களின் பணிகளுக்கு இடையூறாக அமையும்
என்றும், சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில், இதற்கு மேல் நாம் தலையிட முடியாது
என்றும் கூறியுள்ளது. ஆகையால் புதிய விதிமுறைகளுக்கு இங்கே வேலையில்லை என்று
டிராய் தெளிவாகக் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக