Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 16 செப்டம்பர், 2020

சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார் - சென்னை HC அதிரடி உத்தரவு!!

சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார் - சென்னை HC அதிரடி உத்தரவு!!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' (Soorarai Pottru) பட பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள "மண் உருண்ட மேல" என்ற பாடலில், சாதி தொடர்பான வரிகள் இருப்பதாகவும், இது போன்ற பாடல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், 2022-ஆம் ஆண்டு வரை படத்துக்கு தடை விதிக்கக் கோரி, தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

நாடு முழுவதும் செப்டம்பர்-13 நீட் தேர்வு நடைபெற்றது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், நீட் தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில், நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது என்றும், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நீட் தேர்வுக் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து வரும் நிலையில், சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான ஹேஸ்டேக், இந்திய அளவில் டிரண்டானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக