டிவிட்டர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வழியாக இந்த அம்சத்தைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த அம்சம் தற்பொழுது சோதனை கட்டத்தில் உள்ளது என்று டிவிட்டர் அறிவித்துள்ளது. அப்படி என்ன சேவையை டிவிட்டர் அறிமுகம் செய்யப் போகிறது என்பது தானே உங்களுடைய கேள்வி இப்பொழுது? வாருங்கள் பார்க்கலாம்.
டைரக்ட் மெஸேஜ் சேவையில் குரலைப் பதிவு செய்து அதை ஆடியோ மெசேஜ்ஜாக பயன்படுத்தும்
சேவையை கொண்டுவர டிவிட்டர் முயற்சி செய்கிறது. உலக நாடுகளில் உள்ள முக்கிய
பிரமுகர்கள் அனைவரும் ஒன்றாக குவிந்திருக்கும் இடம் தான் டிவிட்டர். அதிகாரப்பூர்வ
அறிவிப்பு தளமாக டிவிட்டர் தற்போது மாறியுள்ளது. ஸ்மார்ட்போன் அறிமுகம் முதல்
ஸ்விக்கியில் புகார் அளிப்பது வரை இப்பொழுது எல்லாம் டிவிட்டரில் தான்
நடைபெறுகிறது.
இப்படி முக்கிய அறிவிப்புகளை அறிவிக்கும் முக்கிய தளமாக மாறிப்போன டிவிட்டரில் இன்னும் பல வசதிகள் அறிமுகம் செய்யப்படவேயில்லை என்பது தான் வருத்தம். டிவிட்டரில் பயனர்கள் வார்த்தைகளைக் கூட அளவாகத் தான் பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட வார்த்தைக்கு மேல் பயனர்கள் கூடுதல் வார்த்தையைப் பயன்படுத்த வேண்டுமாயின் கமெண்ட் ஆப்ஷனை இணைத்துத் தான் அவர்களின் கருத்தைப் பதிவு செய்ய முடியும்.
இந்நிலையில் இது பயன்பாட்டாளர்களின் மத்தியில் பெரும் சிக்கலை உருவாக்கியது. இதனால், டிவிட்டர் பயனர்கள் பலரும் இது குறித்து டிவிட்டரில் புகார் அளித்தனர். டிவிட்டர் பயன்பாட்டாளர்களின் கோரிக்கையை அறிந்து, டிவிட்டர் தற்பொழுது டைரக்ட் மெஸேஜ் மூலம் குரல் பதிவு அனுப்பும் வசதியைப் புதிதாகச் சேர்த்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த புதிய அம்சம் பிரேசிலில் சோதிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த அப்டேட் விரைவில் உலகம் முழுவதும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் டிவிட்டரில் தேவைப்படும் பல அம்சங்கள் வரும் காலங்களில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்கள் தேவையை அறிந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக