Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 15 அக்டோபர், 2020

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்.!

சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி20 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதால் விவோ ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.


இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான Funtouch OS 11 கொண்டு இயங்குகிறது இந்த விவோ வி20 எஸ் ஸ்மார்ட்போன். மேலும் வேகமாக செயல்படும் மென்பொருளை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதேசமயம் இந்தியாவில் 64ஜிபி மெமரியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது. பின்பு Gravity Black மற்றும் Oxygen Blue என இரண்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா மற்றும் போர்ட்ரைட் மோட், சூப்பர் நைட் செல்பி, பேஸ் பியூட்டி உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கொண்டு 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.


4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது இந்த விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்.


விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 4100எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்காசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை MYR 1,199-ஆக உள்ளது. இந்தியாவில் ரூ.21,300-விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!