Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 6 அக்டோபர், 2020

ஆன்லைனில் வாங்கப்பட்ட 4000 செல்லப் பிராணிகளுக்கு நேர்ந்த அவலம்!!

China horror: ஆன்லைனில் வாங்கப்பட்ட 4000 செல்லப் பிராணிகளுக்கு நேர்ந்த அவலம்!!

ஒரு பயங்கரமான சோக நிகழ்வாக, ஆன்லைனில் வாங்கப்பட்டதாக நம்பப்படும் சுமார் 4,000 நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் பிற விலங்குகள் சீனாவில் பெட்டிகளில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. விலங்குகள் அனைத்தும் பிளாஸ்டிக் அல்லது உலோகக் கூண்டுகளில் அடைக்கப்பட்டு அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்தன. அவை ஒரு கப்பல் கிடங்கில் சுமார் ஒரு வாரமாக அட்டைப் பெட்டிகளில் அடைந்து கிடந்துள்ளன.

ஹெனனின் லுயோ நகரத்தில் உள்ள டோங்சிங் லாஜிஸ்டிக்ஸ் நிலையத்தில் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, சுமார் ஒரு வார காலமாக, உணவு, தண்ணீர் இல்லாமல், இந்த செல்லப் பிராணிகள் (Pet Animals) அட்டைப்பெட்டிகளில் அடைபெட்டு இருந்துள்ளன.

ஒரு சிபிஎஸ் செய்தி அறிக்கையின்படி, இந்த மரணங்கள் சீனாவின் (China) வளர்ந்து வரும் வெகுஜன-இனப்பெருக்கத் துறையின் விநியோகச் சங்கிலியின் தவறான தகவல்தொடர்பு காரணமாக இருக்கலாம் என்று தெரிய வருகிறது.

ஏற்கனவே 4000 விலங்குகள் இறந்திருந்தாலும், 1,000 முயல்கள், வெள்ளெலிகள், நாய்கள் மற்றும் பூனைகள் காப்பாற்றப்பட்டன. நோய்வாய்ப்பட்ட விலங்குகள் கால்நடை கிளினிக்குகளுக்கு அனுப்பப்பட்டன. மற்ற விலங்குகளில் பலவற்றை மக்கள் எடுத்துச் சென்றனர்.

”நாங்கள் இதற்கு முன்பும் இப்படி விலங்குகளை மீட்டுள்ளோம். ஆனால், இந்த அளவு மோசமான ஒரு நிகழ்வை நான் இன்றுதான் காண்கிறேன். நாங்கள் அங்கு சென்றபோது, ​​விலங்குகள் அடங்கிய பெட்டிகள் பல சிறிய மலைகளாக குவிக்கப்பட்டிருந்தன. அவற்றில் பல மிருகங்கள் இறந்துவிட்டிருந்தன. இறந்த மிருகங்களின் உடல்கள் அழுகத் துவங்கி துர்நாற்றம் வீசத் தொடங்கியிருந்தது.” என்று யுடோபியா விலங்கு மீட்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒரு தன்னார்வலர் கூறினார்.

"மூச்சுத் திணறல், நீரிழப்பு மற்றும் பட்டினியால் அந்த மிருகங்கள் இறந்துள்ளன என்பது தெளிவாகத் தெரிந்தது" என்று உட்டோபியாவின் விலங்கு மீட்புக் குழுவின் நிறுவனர் சகோதரி ஹுவா சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தார்.

நாம் எதிர்கொண்டிருக்கும் COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், உயிருள்ள விலங்குகளை இப்படி அட்டைப் பெட்டிகளில் அடைத்து கொண்டு செல்வதும், அவை இப்படி கொடூரமாக இறந்து போவதும் மிகவும் பீதியை அளிக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.

சீனாவில் ஆன்லைன் செல்லப்பிராணி விற்பனை கட்டுப்பாடுகளில் உள்ள குறைபாடுகளை இந்த சம்பவம் மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக