Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 8 அக்டோபர், 2020

உங்க குழந்தைகளுக்கு ஒரு குட் நியூஸ்: ஜியோ வழங்கப்போகும் பிரத்யேக சலுகை!

 பிரதான தொலைத் தொடர்பு நிறுவனம்

இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ, குழந்தைகளுக்கான கல்வி உள்ளடக்கத்தை வழங்க யுஎஸ்பி ஸ்டுடியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.


பிரதான தொலைத் தொடர்பு நிறுவனம்

இந்தியாவின் பிரதான தொலைத் தொடர்பு நிறுவனங்களில் முதன்மையாக ரிலையன்ஸ் ஜியோ திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி என்பதை ஜியோ வருகைக்கு முன்பு பின்பு என்றே பிரிக்கலாம்.


குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது. அதற்கு காரணம் ஜியோவின் குறைந்த விலையில் அதிக சலுகைகளோடு கூடிய திட்டங்களே ஆகும். ரிலையன்ஸ் ஜியோ திட்டங்கள் வழங்கும் டேட்டா, வாய்ஸ் கால் உள்ளிட்ட சலுகைகளோடு ஓடிடி அணுகலை அதிகமாகவே வழங்குகிறது.


யுஎஸ்பி ஸ்டுடியோஸ்

யுஎஸ்பி ஸ்டுடியோஸ் ப்ரீஸ்கூல் குழந்தைகளுக்கான உள்ளடக்கத்தை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது. அதோடு யுஎஸ்பி ஸ்டுடியோஸ் தனித்துவமான அனிமேஷன் தன்மையை உருவாக்குவதில் வல்லமை படைத்தது.


மாதந்தோறும் 2.5 பில்லியன் பார்வையாளர்கள்

யுஎஸ்பி ஸ்டுடியோஸ் 130 மில்லியன் சந்தாதாரர்களுக்கு சேவைகளையும் மாதந்தோறும் 2.5 பில்லியன் பார்வையாளர்களையும் கொண்டுள்ளது. யுஎஸ்பி ஸ்டுடியோஸ் சேவையானது ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது.

 குழந்தைகளுக்கு உள்ளடக்கம்

இந்த நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ குழந்தைகளுக்கு உள்ளடக்கத்தை உருவாக்கும் யுஎஸ்பி ஸ்டுடியோஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

யுஎஸ்பி ஸ்டுடியோஸ் அறிக்கை

இந்தியாவிற்கான மிகப் பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ரிலையன்ஸ் ஜியோ, குழந்தைகளுக்கான உள்ளடக்கத்தை உருவாக்கும் யுஎஸ்பி ஸ்டுடியோஸுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டணியைத் தொடர்ந்து, ஜியோ பயனர்கள் எட்டு வகை கல்வி பயன்பாடுகளுக்கான அணுகலைப் பெறுவார்கள் என்று யுஎஸ்பி ஸ்டுடியோஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எட்டு வகை கல்வி பயன்பாடுகள்

கிட்ஸ் ஃபர்ஸ்ட், கிட்ஸ் டிவி இந்தியா, ஜூனியர் ஸ்குவாட் கிட் பாடல்கள், சிறந்த நர்சரி ரைம்ஸ், கிட்ஸ் சேனல் இந்தியா, பாப் தி ரயில், லிட்டில் ட்ரீஹவுஸ் ரைம்ஸ் மற்றும் ஃபார்மீஸ் நர்சரி ரைம்ஸ் ஆகியவை இந்த அணுகலில் அடங்கும்.

பயனர்கள் விரும்பும் மொழி

யுஎஸ்பி ஸ்டுடியோஸ் உடனான ஜியோவின் கூட்டு என்பது இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு யுஎஸ்பி உள்ளடக்கத்தை கிடைப்பதை மேலும் உறுதி செய்யும் விதமாக உள்ளது. இது பயனர்கள் விரும்பும் மொழியில் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக