தற்போது நாவல் கொரோனா வைரஸ் உலகளவில் சுமார் 37 மில்லியனுக்கும் அதிகமானவர்களை பாதித்துள்ளது மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள சாதனைப் புரிந்த விஞ்ஞான சமூகம் மற்றும் மருத்துவ நிபுணர்களின் முயற்சிகளால் கூட இன்னும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், இதற்கான முயற்சிகளில் தீவிரமாக உள்ளதால், இன்னும் குறைந்தது நான்கு முதல் ஆறு மாதங்களில் தடுப்பூசி மக்களுக்கு கிடைத்திடலாம். அதே சமயம் ஒரு தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. ஒரு பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பு மருந்து தயாரிப்பதன் பின்னனியில் பல விஷயங்கள் உள்ளன. சொல்லப்போனால் இதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம்.
ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் குறித்து புதிய புதிய விஷயங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிய வருவது போல், இந்த கொரோனா வைரஸில் புதிய புதிய அறிகுறிகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்த கொடிய வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
அதிலும் தற்போது பருவநிலை அவ்வப்போது மாறிக் கொண்டிருப்பதால், பலரும் சளி, இருமல் பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும். இந்த சூழ்நிலையில் இம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் எந்த வழியிலும் ஒருவரை அண்டக்கூடும்.
கொரோனா அறிகுறிகள்
தற்போது ஊடரங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், நாம் வீட்டை விட்டு வெளியே வந்து சுற்ற ஆரம்பித்துவிட்டோம். இதனால் இந்த வைரஸை எளிதில் பெறுவதற்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கிறது. கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த தொடக்க காலத்தில், மூச்சுவிடுவதில் சிரமம், காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் தான் கொரோனாவின் முக்கிய அறிகுறிகளாக கருதப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி தாக்குகிறது. அதோடு வெவ்வேறு அறிகுறிகளையும் வெளிக்காட்டுகிறது.
மூக்கில் சந்திக்கும் பிரச்சனைகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் மூக்கு ஒழுகல் மற்றும் மூக்கடைப்பை சந்தித்ததாக புகாரளிக்கிறார்கள். ஆனால் மூக்கு ஒழுகல் மற்றும் மூக்கடைப்பு ஆகியவை கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் லேசான நிகழ்வுகளில், சிலருக்கு மூக்கு ஒழுகல் மற்றும் மூக்கடைப்பு ஏற்படுகிறது. இதை பலர் சளி அல்லது இருமல் என்று தவறாக கருதுகின்றனர்.
கொரோனா என்பதை எவ்வாறு அறிவது?
சாதாரண சளி மற்றும் கோவிட்-19 ஆகியவற்றை வேறுபடுத்துவது கடினம். குறிப்பாக மூக்கு ஒழுகல் மற்றும் மூக்கடைப்பு போன்ற பொதுவான அறிகுறிகள் இருந்தால் கண்டறிவது என்பது மிகவும் கடினம். ஆனால் எப்போது ஒருவருக்கு கொரோனாவின் பிற அறிகுறிகளான காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சு விடுவதில் சிரமம், தலை வலி, தசை வலி, விவரிக்கமுடியாத சோர்வு போன்றவற்றுடன் மூக்கடைப்பு, மூக்கு ஒழுகலை சந்தித்தால், அத்தகையவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதற்கான வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அத்தகையவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
உலக சுகாதார அமைப்பு கூற்று
சாதாரண காய்ச்சல் அல்லது ஜலதோஷம் சந்திப்பவர்களுக்கு பொதுவாக மூச்சுத்திணறல் ஏற்படாது. ஆனால் கோவிட்-19-இல் இது ஒரு பொதுவான நிகழ்வு. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெரும்பாலான மக்களுக்கு வறட்டு இருமல் மற்றும் காய்ச்சல் கோவிட்-19 அறிகுறிகளாக இருக்கும் போது, மூக்கு ஒழுகல் மற்றும் மூக்கடைப்பு இருந்ததில்லை. எனவே இவற்றை அறிகுறிகளாக எடுத்துக் கொள்ள முடியாது.
மூக்கு ஒழுகல் மற்றும் மூக்கடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?
கொரோனா வைரஸ்
ஆபத்தான விகிதத்தில் தொடர்ந்து பரவுவதால், நீங்கள் காய்ச்சல் அல்லது சளி (மூக்கு ஒழுகல்
மற்றும் மூக்கடைப்பு உட்பட) போன்ற அறிகுறிகளை அனுபவித்தால், அது கொரோனாவாக இருக்கலாம்
என்று கருதி, அதற்கேற்றவாறு உங்கள் நடத்தைகளை மாற்றிக் கொண்டால், மற்றவர்களுக்கு பரவுவதைத்
தடுக்கலாம். உங்களுக்கு லேசான கோவிட்-19 தொற்றாக இருந்தாலும், உயர் ஆபத்துள்ள பிரிவில்
உள்ளவர்களுக்கு பரப்பி, அவர்களது உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம். எனவே நீங்கள் இம்மாதிரியான
அறிகுறிகளை அனுபவிக்கும் போது, சற்றும் தாமத்திக்காமல் மருத்துவரை அணுகி, இதுக்குறித்து
பேசி, அவர் பரிந்துரைப்பதைப் பின்பற்றுவது நல்லது
ஆரம்பகால நோயறிதல் விரைவாக மீட்க உதவும்
நாவல் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கு தடுப்பூசி இல்லாத நிலையில், செயல்திறன்மிக்க நடவடிக்கைகளுடன் பயணம் செய்வதே நல்லது. அதற்கு முகக்கவசங்கள் அல்லது முகமூடிகளை அணிவதோடு, சமூக தொலைத்தூர விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடலில் ஏதேனும் அசாதாரண அறிகுறிகள் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த வைரஸ் பரவ ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் கோவிட்-19 ஒரு சுவாச நோயாக கருதப்பட்டாலும், இது தலை முதல் கால் வரை உடலின் பல பாகங்களையும் பாதிக்கும் என்பது தற்போது தெரிகிறது. எனவே கோவிட்-19 இன் அறிகுறிகளைப் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். இதனால் சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்று விரைவில், இந்த நோய்த்தொற்றில் இருந்து மீள உதவும்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக