Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 15 அக்டோபர், 2020

வெற்றி பெறலாம்... இப்படி இருந்தால்... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!

------------------------------------------------

டீச்சர் : பசங்களா கேளுங்க... எந்த உணவையுமே காய்ச்சி சூடா வெச்சாத்தான் பாக்டீரியா தங்காது.

மாணவன் : போங்க டீச்சர்... அப்படி பார்த்த பூமியே பயங்கர சூடாதான் இருக்கு, எல்லா பாக்டீரியாவும் செத்து இருக்கணும்ல.

டீச்சர் : 😳😳

------------------------------------------------

மனைவி : நம்ம பையன் எங்க பணம் வெச்சாலும் எடுத்துக்கிட்டு போயிடறாங்க..

கணவன் : அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.. பத்திரமா இருக்கும்..

மனைவி : 😜😜

------------------------------------------------

குரு : டேய் எதுக்குடா மெழுகுவர்த்தி ஏத்தி இருக்க?

ராம் : கரண்ட் இல்லடா..

குரு : சரி... சரி... பேனையாவது போடு..

ராம் : லூசாடா நீ? மெழுகுவர்த்தி அணைஞ்சிடாது?

குரு : 😬😬

------------------------------------------------

படித்ததில் பிடித்தது...!!

------------------------------------------------

தோற்றுப்போய் விட்டோமோ என உடைந்து போய் நிற்பதை விட,

தோல்வி தானே என உறுதியுடன் திறம்பட, தளராத நம்பிக்கையோடு 

எழுந்து ஓரடி வையுங்கள்...

அடுத்த அடி தானாக வைத்து வெற்றி பயணத்தை தொடங்கியிருக்கும் 

மனமும், உடலும்...!!

முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால்,

முன்னேற்றத்திற்கான வாசல் கதவுகள்

எப்போதும் திறந்தே இருக்கும்...!!

------------------------------------------------

வெற்றி பெறுவீர்கள்... இப்படி இருந்தால்...!!

------------------------------------------------

👉 மலர்ந்த முகத்துடன் இருங்கள்...

👉 மகிழ்ந்த மனதுடன் இருங்கள்...

👉 பண்பு நிறைந்த செயல்களைச் செய்யுங்கள்...

👉 நீங்கள் எங்கு சென்றாலும், வரவேற்கப்படுவீர்கள்...

👉 எதை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள்...!!

------------------------------------------------

விடுகதைகள்...!!

------------------------------------------------

1. தங்கை தீட்டிய ஓவியம் தரையில் தவழ்கிறது. அது என்ன?

2. அனைவரையும் ஆட்டிப் படைக்கும், ஆதவன் வந்தால் ஓடிப்போகும். அது என்ன?

3. வாணலியில் விரியும் வட்ட வட்ட இலை. அது என்ன?

4. உச்சியின் ஊடே சிக்கல் தீர்ப்பான், சிக்கிக் கொண்டால் பல்லை இழப்பான். அவன் யார்?

5. கொடுக்கு இரண்டு இருந்தாலும், அவனுக்கு வாலில்தான் விஷம். அவன் யார்?

பதில்கள்

1. கோலம்.

2. குளிர்.

3. அப்பளம்.

4. சீப்பு.

5. தேள்.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!