விருச்சக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். மேலும், விருச்சக ராசியில் செவ்வாய் தனது ஆட்சி பலத்தை பெறுகின்றார். தனது ஆட்சி வீட்டில் இருந்து அவர் புரியும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
👉 எந்த செயலிலும் வேகம் உடையவர்கள்.
👉 முன்கோபம், பிடிவாதம் மற்றும் வைராக்கிய குணம் மிகுந்தவர்கள்.
👉 எதையும் மறக்காதவர்கள். அது இன்பமானாலும் சரி. துன்பமானாலும் சரி.
👉 இவர்களை சிரிக்க வைப்பது என்பது சாதாரண காரியமன்று.
👉 எப்போதும் சிடுசிடுவென இருப்பார்கள்.
👉 தனிமை என்பது இவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
👉 பேச்சுகளையும், சொற்களையும் அளந்து பேசக்கூடியவர்கள்.
👉 எதிலும் அலட்சிய குணம் உடையவர்கள்.
👉 மனதில் நினைப்பதை வெளிப்படுத்த தெரியாதவர்கள்.
👉 அனைவரையும் ஒருவராக கருதக்கூடியவர்கள். வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டவர்கள்.
👉 எப்போதும் மனதில் எதையாவது எண்ணிக்கொண்டே இருப்பார்கள்.
👉 பிறரை பற்றி யோசிப்பது, மற்றவர்களுக்கு உதவுவது போன்ற எண்ணங்கள் இவர்களுக்கு குறைவு தான்.
👉 ஆன்மிக எண்ணங்கள் இருந்தால் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
👉 பிரச்சனையை முடிக்க முடியாமல் அதனை வளர்த்துக் கொள்ளக்கூடியவர்கள்.
👉 எடுத்த காரியத்தில் வெற்றி கொள்ளும் வரையில் நித்திரை இல்லாதவர்கள்.
👉 எளிதில் யார் மீதும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். சில நேரங்களில் தன்னையே நம்ப மாட்டார்கள்.
👉 கற்பனை வளம் உடையவர்கள்.
👉 கடன் வாங்கியாவது எண்ணியதை நிறைவேற்றக்கூடியவர்கள். அதன்பின் வரும் விளைவுகள் பற்றி சற்றும் சிந்திக்க மாட்டார்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக