Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 21 அக்டோபர், 2020

திருமணத்தில் இணைவதும், ராணுவத்தில் இணைவதும் ஒன்று... எப்படி? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------

கலக்கலான ஜோக்ஸ்...!!

----------------------------------------------------

பாலு : கல்யாணம் பண்ணிக்கப்போறதா சொன்னியே... தற்காப்புக்காக என்னென்ன கத்து வெச்சிருக்க?...

குமார் : மாவு ஆட்டுறது, தோசை சுடுறது, அடிக்க வந்தா ஓடுறது...

பாலு : 😂😂

----------------------------------------------------

பிச்சைக்காரன் : ஐயா... சாப்பிட ஏதாவது கொடுங்க சாமி...

தினேஷ் : இந்தா பத்து ரூபாய் வெச்சிக்கோ...

பிச்சைக்காரன் : எதுக்கு ஐயா சோறு கேட்டா காசு கொடுக்குறீங்க?

தினேஷ் : என் கஷ்டம் என்னோடு போகட்டும்... நீ கடையில போயி சாப்பிட்டுக்கோ...

பிச்சைக்காரன் : 😜😜

----------------------------------------------------

பொன்மொழிகள்...!!

----------------------------------------------------

ஒரு அன்பான இதயம், ஆயிரம் அழகான முகத்திற்கு சமம். 

எப்போதும் அழகான முகத்தை விட, அன்பான இதயத்தை நேசி. 

உன் வாழ்க்கை இனிதாக இருக்கும்.

----------------------------------------------------

நல்லவராக இருப்பது சிறந்ததுதான் ஆனால்...

நல்லது கெட்டது தெரியாத நல்லவராக இருப்பது ஆபத்தானது.

----------------------------------------------------

ஒருவனிடம் உள்ள மிக பெரிய பலவீனம், தன்னை தானே மிக பெரிய புத்திசாலி என்று எண்ணுவதே.

----------------------------------------------------

இன்றைய கடி...!!

----------------------------------------------------

திருமணத்தில் இணைவதும், ராணுவத்தில் இணைவதும் ஒன்று... எப்படி?

இமைப்பொழுதும் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.😎😎

----------------------------------------------------

நிம்மதியா இருக்கும்போது மனைவியை தேடுவதும்...

மனைவி வந்தபின் நிம்மதியை தேடுவதும்... ஆண்களின் வாழ்க்கை தேடல்...😇😇

----------------------------------------------------

பொங்கல்ல இருக்குற பத்து முந்திரியில ஒன்னுகூட நமக்கு வராது...

ஆனா முப்பது மிளகும் நமக்குதான் வரும்... அதான் வாழ்க்கை...!😉😉

----------------------------------------------------

குறளும், பொருளும்...!!

----------------------------------------------------

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு.

----------------------------------------------------

பொருள் :

----------------------------------------------------

உடம்புக்கும், உயிருக்கும் இடையே உள்ள உறவு, முட்டையிலிருந்து வேறு இடத்திற்கு பறந்து செல்லும் பறவையை போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!