Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 8 அக்டோபர், 2020

டிரைவர் போட்ட பிரேக்கால் கண்ணாடியை உடைத்துக் கொண்டு சாலையில் விழுந்த கண்டக்டர்!

 


சென்னை ஆவடி அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது, பேருந்தின் குறுக்கே குழந்தை ஒன்று திடீரென ஓடியதால், ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார்.

அப்போது பயணிகளுக்கு பயணசீட்டு கொடுத்துக் கொண்டிருந்த நடத்துனர் ஆறுமுகம் நிலைதடுமாறி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு சாலையில் விழுந்துள்ளார்.

இவர் தவறி விழுந்ததில், ஆறுமுகம் மீது கண்ணாடி துகள்கள் குத்தியதால் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து, இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடிவேல் பட பாணியில், கண்டக்டர் கண்ணாடியை உடைத்துக் கொண்டு விழுந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!