Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 7 அக்டோபர், 2020

சீனா-பாகிஸ்தானை கதிகலங்கவைத்த இந்தியா சோதனை: சீறிப்பாய்ந்த SMART ஆயுதம்!

DRDO அமைப்பு சோதனை செய்த புதிய SMART ஆயுதம்

இந்தியாவின் DRDO அமைப்பு புதிய கலப்பின ஆயுதமான SMART என்ற சூப்பர்சோனிக் மிஸைல் அசிஸ்டெட் ரிலீஸ் ஆஃப் டோர்பெடோ (Supersonic Missile assisted release of Torpedo) என்ற ஆயுதத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்து வெற்றி அடைந்துள்ளது. இந்திய வரலாற்றில் இந்த ஆயுதம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO அமைப்பு சோதனை செய்த புதிய SMART ஆயுதம்

இந்தியாவின் DRDO அமைப்பு சோதனை செய்த புதிய SMART ஆயுதம் நிச்சயம் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானைக் கதிகலங்க வைக்கும் என்று DRDO பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (DRDO) அமைப்புக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்டர் மூலம் தனது பாராட்டைத் தெரியப்படுத்தியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

நீர்மூழ்கி எதிர்ப்பில் இந்த ஆயுதம் நமது நாட்டிற்கான புதிய வலிமையைக் கொடுத்துள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா போரின் போது மிகவும் சக்திவாய்ந்த நாடக இருக்கும் என்பதை இது உறுதி செய்துள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றிக்குச் சாத்தியமான DRDO மற்றும் பிற அமைப்புகளையும் பணியாளர்களையும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

புதிய SMART ஆயுதம்

இந்த புதிய ஆயுதம் ஒரு கலப்பின ஆயுதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வெவ்வேறு ஆயுதங்களின் திறன்கள் ஒரே ஆயுதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆயுதம் இந்திய ராணுவத்தின் செயல்திறனை அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. முந்தைய ஆயுதங்களுடன் இதன் செயல்திறன் மற்றும் வேகத்தை ஒப்பிடும்போது புதிய SMART ஆயுதம் பலமுறை அதிநவீனமானது என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் இடையில் ஏற்பட்டுள்ள எல்லைப் பதற்றம்

ஸ்மார்ட் ஒரு சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஆகும். இந்திய எல்லையில், சீனாவும் பாகிஸ்தானும் இடையில் ஏற்பட்டுள்ள எல்லைப் பதற்றம் காரணமாக இந்தியா தனது ஆயுத பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் ராணுவ பலத்தை அதிகரித்து பாதுகாப்பு நடவடிக்கையையும் அதிகரிக்கும் முயற்சியில் இந்தியா தற்பொழுது களமிறங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக