Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 7 அக்டோபர், 2020

செகண்ட் ஹேண்ட் ஸ்மார்ட்போன் திருட்டு போனா?- எளிதாக கண்டுபிடிக்கலாம்!

பிரதான தேவையாக ஸ்மார்ட்போன்கள்

செகண்ட் ஹேண்ட் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இந்த தகவல் உங்களுக்கு முக்கியமானதாகும். செகண்ட் ஹேண்ட் ஸ்மார்ட்போன் வாங்கும் போது அது திருட்டுப் போனா என்பது கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

பிரதான தேவையாக ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்கள் தேவை என்பது தற்போது பிரதானமாக இருந்து வருகிறது. கையில் இருக்கும் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் வாங்கத்திட்டம் இருக்கும்போது ஒன்று முதல் பணம் செலுத்தி தவணை முறையில் ஸ்மார்ட்போன் வாங்கலாம் அல்லது செகண்ட் ஹேண்டட் ஸ்மார்ட்போன்கள் வாங்கலாம்.

குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள்

குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டும் என்றால் அதற்கான ஒரே வழி செகண்ட் ஹேண்ட் ஸ்மார்ட்போன்கள் தான். கையில் இருக்கும் போன் தொலைந்து போனாலோ அல்லது பழுதடைந்தாலோ உடனடியாக வேறு போன் தேவை என்ற நிலையின் போது செகண்ட் ஹேண்டட் ஸ்மார்ட்போன்கள் வாங்கத்தான் எண்ணம் தோன்றும்.

செகண்ட் ஹேண்ட் ஸ்மார்ட்போன்கள்

செகண்ட் ஹேண்ட் ஸ்மார்ட்போன்கள் வாங்கத் திட்டமிட்டிருக்கும் போது அதற்கு இரண்டு வழிமுறைகள் வரும் ஒன்று பஜார் போன்ற கடைத் தெருவில் சென்று ஸ்மார்ட்போன்கள் வாங்குவோம் அல்லதை ஓஎல்எக்ஸ் க்விக்கர் போன்ற வலைதளங்களை அணுகுவோம்.

திருட்டப்போனாக இருக்கக் கூடாது

அப்படி ஸ்மார்ட்போன்கள் வாங்கும்போது அது திருட்டப்போனாக இருக்கக் கூடாது என்பது கவனிக்கத்தக்க வேண்டிய ஒன்று. நாம் வாங்கும் செகண்ட் ஹேண்டட் ஸ்மார்ட்போன்கள் திருட்டுப்போனா என கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ஐஎம்இஐ எண்கள் கண்டுபிடிக்க வேண்டும்

ஸ்மார்ட்போன்களில் ஐஎம்இஐ எண்களை கண்டுபிடிக்க வேண்டும். இரண்டு ஸ்மார்ட்போன்கள் இருந்தால் இரட்டை ஐஎம்இஐ எண்கள் இருக்கும். அதை சோதித்து பார்க்க வேண்டும். ஐஎம்இஐ பார்ப்பதற்கு *#06# என்ற எண்ணிற்கு டயல் செய்தால் உடனே டிஸ்ப்ளேயில் காண்பிக்கப்படும்.

14422 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ்

இதை எஸ்எம்எஸ் ஆக அனுப்ப வேண்டும் அதாவது கேவொய்எம் (KYM) என டைப் செய்து ஐஎம்இஐ எண்களோடு 14422 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் அனுப்பிய சிறிது நேரத்தில் ஸ்மார்ட்போன்கள் குறித்த அனைத்து விவரங்களும் செய்தி குறிப்பிடுவது போல் அனுப்பப்படும்.

இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டாம்

திரும்பக் கிடைக்கும் தகவல்களில் உற்பத்தியாளர் பெயர், பிராண்ட் பெயர் உள்ளிட்ட விவரங்கள் காண்பிக்கப்படும். ஸ்மார்ட்போன்கள் விவரங்களும் அதில் கிடைக்கப்பெற்ற தகவல்களும் ஒத்துப்போகிறதா என பொருத்தி பார்க்கலாம். ஐஎம்இஐ எண்கள் எவ்வித சேதமும் இல்லை என அறிந்துக் கொள்ளலாம். அதேநேரத்தில் செய்தி தவறாகவோ அல்லது கருப்பு பட்டியலிலோ அல்லது முன்னதாக அதே ஐஎம்இஐ பயன்படுத்தப்பட்டது அல்லது நகல் என்று காண்பிக்கப்பட்டால் அந்த ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

, ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக