ஓப்போ நிறுவனம் தங்களது ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போனானது 6.44 இன்ச் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 16 எம்பி குவாட் கேமராவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போன்
ஓப்போ நிறுவனம் இன்று துனிசியாவில் ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல் இதுவரை அறிவிக்கவில்லை. இந்த ஸ்மார்ட்போனானது நேவி ப்ளூ மற்றும் க்ளாசிக் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
6.44 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ்
ஓப்போ ஏ 73 ஸ்மார்ட்போனானது 6.44 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 2400 x 1080 பிக்சல்கள் திரை, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தோடு கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சமும் கொண்டுள்ளது.
4000 எம்ஏஹெச் பேட்டரி
ஓப்போ ஏ 73 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஹெச் பேட்டரி 30 வாட்ஸ் விஓஓசி 4.0 வேகமான சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனானது 662 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி ஆதரவோடு இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் மெமரி விரிவாக்க வசதியும் இருக்கிறது.
குவாட் கேமரா அமைப்பு
ஓப்போ ஏ 73 ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதில் 16 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல்கள் மோனோக்ரோமேடிக் சென்சார்கள் உள்ளது. செல்பி கேமராவிற்கென 16 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி
ஓப்போ ஏ 73 ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி பாதுகாப்பு அம்சத்திற்காக பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் இணைப்பு அம்ச ஆதரவோடு கலர் ஓஎஸ் 7.2 மூலம் இயக்கப்படுகிறது. வைபை 802.11, ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியை இதில் உள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 662
மொத்தமாக ஓப்போ ஏ73 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662, பின்புறத்தில் 16 எம்பி கேமரா, 8 எம்பி கேமரா, 2 எம்பி மற்றும் 2 எம்பி கேமரா கொண்டிருக்கிறது.
16 எம்பி செல்பி கேமரா
இதன் செல்பி வசதிக்கென 16 எம்பி செல்பி கேமரா, 6 ஜிபி ரேம் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது. இதில் 128 ஜிபி சேமிப்பு வசதியும் இதில் உள்ளது. 4000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.
ஓப்போ எஃப் 17 விலை
கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனுடன் ஓப்போ ஏ73 ஒத்திருக்கிறது. ஓப்போ எஃப் 17 விலை 17,990 ஆகும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் கிடைக்கும் நிறங்களில் மாறுபடுகின்றன. அதேபோல் ஓப்போ எஃப் 17 8 ஜிபி வேரியண்டிலும் கிடைக்கிறது ஓப்போ ஏ73 6 ஜிபி ரேம் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக