
இப்படி கூட திருமணத்திற்குப் பெண் தேடுவார்களா? என்று நினைப்பது போல் சமூக வலைத்தளத்தில் ஒரு விளம்பரம் வெகு வேகமாக வைரல் ஆகிவருகிறது. சமீபத்தில் வெளியான ஒரு மேட்ரிமோனி விளம்பரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வைரல் ஆகும் அளவிற்கு அப்படி என்ன விளம்பரம் செய்தார்கள் என்று பார்க்கலாம்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாட்டர்ஜி என்பவர் மணப்பெண் தேவை என்று மேட்ரிமோனி பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார். இவர், தனக்கு வரப்போகும் வருங்கால மனைவிக்கு பேஸ்புக், யூடியூப், டிவிட்டர் போன்ற எந்த சமூக ஊடகத்திற்கு அடிமையாகாத பெண்ணாக இருக்க வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளார். தற்பொழுது இவர் கொடுத்த விளம்பரம் வைரலாகியுள்ளது.
இந்த விளம்பரத்தைப் பார்த்து நெட்டிசன்ஸ்கள் பலரும் பலவிதமான கருத்தை பதிவு செய்துள்ளனர். இதில் பல ஆண்கள், இப்படியெல்லாம் பெண் தேடினால் வேலைக்கே ஆகாது என்றும், இந்த ஜென்மத்தில் இவருக்குத் திருமணம் ஆகாது என்றும் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். தற்பொழுது சமூக வலைத்தளம் முழுதும் இப்படி ஒரு பெண் எங்கே இருக்கிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சாட்டர்ஜி என்ற 37 வயதான 5'7" அடி உயரமுடைய, யோகா பயிற்சியாளர், அழகானவர், நியாயமானவர், எதற்கும் அடிமையாகாதவர், உயர் நீதிமன்றத்தில் வக்கீல் மற்றும் ஆராய்ச்சியாளர். கார் உள்ளது, சொந்தமாக வீடு உள்ளது, பெண்ணிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. மணமகள் நியாயமானவராக, அழகானவராக, உயரமான, ஒல்லியானவராக இருக்க வேண்டும், குறிப்பாக மணமகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாதவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த வைரல் விளம்பரம், நிதின் சங்வான் என்பவர் மூலம் டிவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த விசித்திரமான விளம்பரம் டிவிட்டரில் சுமார் 1,000க்கும் அதிகமான முறை லைக் செய்யப்பட்டு ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. இனி விளம்பரம் செய்யும் மணமகன்கள் மற்றும் மணப்பெண்கள் கவனமாக இருங்கள் என்று வேடிக்கையாகப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக