ஜூம் செயலி மற்றும் கூகுள் மீட் போன்ற தளங்களுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் டீம்ஸ்-ல் இலவச வீடியோ மற்றும் குரல் அழைப்பு அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக மைக்ரோக்சாப் நிறுவனத்தின் இந்த சேவையில் 300 பங்கேற்பாளர்களுடன் 24 மணி நேரம் வரை இணைந்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்Thanksgiving Day-விற்காக Zoom நிறுவனம் தனத 40 நிமிட மீட்டிங் வரம்பை தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்த சில தினங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்சமயம் மைக்ரோசாப்ட் டீம்ஸ் 250 பேர் வரை க்ரூப் சாட்டை உருவாக்கும் திறனுடன், மெய்நிகர் உரையாடல்களின் போது ஒரே நேரத்தில் 49 உறுப்பினர்களை காணும்படி அப்டேட் செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த அம்சம் பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
அண்மையில் வெளிவந்த தி வெர்ஜ் தகவலின்படி, மைக்ரோசாப்ட் டீம்ஸ்-இன் புதிய new all-day video calling விருப்பமானது ஜூம் பயனர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு வலைப்பதிவு இடுகையின் மூலம், வரவிருக்கும் மாதங்களில் நீங்கள் தொடர்ந்து இணைந்திருக்க உதவுவதற்கு இந்த விருப்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் 300 பங்கேற்பாளர்களுடன் 24 மணி நேரமும் மீட்டிங்கில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வீடியோ அழைப்பு மட்டுமின்றி, இந்த டீம்ஸ் மூலம் நீங்கள் வாய்ஸ் அழைப்பும் நிகழ்த்த முடியும். ஒரு வீடியோ அல்லது வாய்ஸ் அழைப்பில் சேர பயனர்கள் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் அல்லது மைக்ரோசாஃப்ட் அக்கவுண்ட்டை உருவாக்க தேவையில்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது.
வாடிக்கையாளர் மைக்ரோசாப்ட் டிம்ஸ் வெப் பதிப்பைப் பயன்படுத்த முதலில் ஒரு மீட்டிங் இணைப்பை உருவாக்கி, பின்பு குறிப்பிட்ட மீட்டிங்கில் சேர விரும்பும் நபர்களுடன் அதை பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் அதை பெறுபவர்கள் வெறுமனே கிளிக் செய்வதின் வழியாக மீட்டிங்கில் சேர அவர்கள் மைக்ரோசாஃப்ட் டிம்ஸ் அக்கவுண்ட்டை உருவாக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் ஜூம் செயலி ஆனது 40 நிமிட வீடியோ அழைப்பு வரம்பை நீக்கியுள்ளது. கூகுள் மீட் போன்ற பிற வீடியோ அழைப்பு தளங்களில் 60 நிமிட வரம்பும். சிஸ்கோ வெபெக்ஸ்-இல் 50 நிமிட அழைப்பு வரம்பும் உள்ளது.
இன்னும் பல நிறுவனங்கள் கூகுள் மீட் மற்றும் ஜூம் செயலியை தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் மைக்ரோசாப்ட் டீம்ஸ் வசதி சிறந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் கண்டிப்பாக அதிகளவு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக