Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 நவம்பர், 2020

அயோடின் குறைபாடு இருப்பதை அறிந்து கொள்வது எப்படி? சமாளிப்பதற்கான வழிகள் என்ன?

அயோடின் குறைபாடு  இருப்பதை அறிந்து கொள்வது எப்படி? சமாளிப்பதற்கான வழிகள் என்ன?

 மனித உடலில் உள்ள ஒவ்வொரு தனிமமும் சீரான அளவில் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதுதான் நோய்களின் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. நம் உடலுக்கு முக்கியமான தனிமங்களில் ஒன்று அயோடின் ஆகும். உணவில் அயோடின் (iodine) சீரான அளவு இருப்பது மிகவும் முக்கியம். அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களில் ஒன்று தைராய்டு (thyroid) ஹார்மோனின் குறைபாடு ஆகும்.

தைராய்டு சுரப்பி நன்றாக செயல்பட அயோடின் உதவுகிறது. அயோடின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உப்பு, அயோடினின் சிறந்த ஆதாரம். இத்தனை சிறப்புமிக்க அயோடினின் சில அம்சங்களை தெரிந்துக் கொள்வோம். 

அயோடின் குறைபாட்டின் அறிகுறிகள்

- கழுத்து வீக்கம்
- திடீரென எடை அதிகரிப்பது
- பலவீனம் அல்லது சோர்வாக உணர்வது
- முடி உதிர்தல் அல்லது குறைவது
- நினைவுக் குறைவு
- கர்ப்ப காலத்தில் சிக்கல்கள்
- மாதவிடாய் சீரற்று வருவது
 

அயோடின் குறைபாடு ஏற்படுவதால் ஏற்படும் நோய்கள்

- பலவீனம் மற்றும் சோர்வு
- உலர்ந்த சருமம்
- கர்ப்ப காலத்தில் சிக்கல்
- அசாதாரண எடை அதிகரிப்பு

அயோடின் குறைபாட்டை சமாளிக்க இந்த விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்

- அயோடைஸ்ட் உப்பு (Iodized salt)
- உருளைக்கிழங்கு
- உலர் திராட்சை
- பழுப்பு அரிசி
- பூண்டு
- நெல்லிக்காய்
- மீன், முட்டை
- தயிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக