Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 நவம்பர், 2020

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

உலக சந்தைகளில்

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் மாடலுக்கு OxygenOS 11.0.2.3 அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாக இந்த அப்டேட் வெப்ப உற்பத்தியைக் குறைக்கிறது மற்றும் மின் நுகர்வு, புளூடூத் இணைப்பு மற்றும் பலவற்றை மேம்படுத்துகிறது.

இந்தியா மற்றும் முக்கிய உலக சந்தைகளில் இந்த அப்டேட் வெளியிடப்படுகிறது. ஐரோப்பா மற்றும் உலகளாவிய பிராந்தியங்களில், ஒன்பிளஸ் 8T முறையே OxygenOS 11.0.2.3.KB05BA மற்றும் 11.0.2.3.KB05AA-ஐப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11 மூலம் இயங்குகிறது. மேலும் 6.55 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) Fluid AMOLED டிஸ்ப்ளே கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் 8டி சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் 850 SoC மற்றும் அட்ரினோ 650 ஜி.பீ.யூ சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்.இந்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனில் மிகவும் முக்கியமானது கேமராக்கள் தான். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்) + 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 481 சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (எஃப் / 2.2 லென்ஸ்) + 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் + 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. செல்பீக்களுக்காக, டிஸ்பிளேவின் மேல் இடது மூலையில் உள்ள ஹோல் பஞ்ச் கட்அவுட்டில் எஃப் / 2.4 லென்ஸுடன் சிங்கிள் 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.

5 ஜி, 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, க்ளோனாஸ் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு 4,500 எம்ஏஎச் பேட்டரியால் சக்தியூட்டப்படுகிறது.

மேலும் இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது பேட்டரியை வெறும் 39 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் 15 நிமிடங்களில் 58 சதவீதம் வரை சார்ஜ் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் அளவீட்டில் 160.7x74.1x8.4 மிமீ மற்றும் 188 கிராம் எடையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக