Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 20 ஏப்ரல், 2024

20-04-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

சித்திரை 7 - சனிக்கிழமை

🔆 திதி : முழுவதும் துவாதசி.

🔆 நட்சத்திரம் : மாலை 03.50 வரை பூரம் பின்பு உத்திரம்.

🔆 அமிர்தாதி யோகம் : மாலை 03.50 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 பூராடம், உத்திராடம்

பண்டிகை

🌷 தூத்துக்குடி ஸ்ரீநடராஜர் பச்சை சாற்றி புறப்பாடு, பகல் நடன சேவை, இரவு சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு.

🌷 திருத்தனி ஸ்ரீசிவபெருமான் ரத உறசவம்.

வழிபாடு

🙏 சனீஸ்வரரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 சித்திரம் வரைய உகந்த நாள்.

🌟 மருந்து செய்வதற்கு ஏற்ற நாள்.

🌟 புதிய ஆபரணங்களை வாங்க நல்ல நாள்.

🌟 இயந்திரப் பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 05.47 AM முதல் 07.35 AM வரை

ரிஷப லக்னம் 07.36 AM முதல் 09.38 AM வரை

மிதுன லக்னம் 09.39 AM முதல் 11.49 AM வரை

கடக லக்னம் 11.50 AM முதல் 01.57 PM வரை

சிம்ம லக்னம் 01.58 PM முதல் 03.59 PM வரை

கன்னி லக்னம் 04.00 PM முதல் 06.00 PM வரை

துலாம் லக்னம் 06.01 PM முதல் 08.05 PM வரை

விருச்சிக லக்னம் 08.06 PM முதல் 10.17 PM வரை

தனுசு லக்னம் 10.18 PM முதல் 12.24 AM வரை

மகர லக்னம் 12.25 AM முதல் 02.18 AM வரை

கும்ப லக்னம் 02.19 AM முதல் 04.01 AM வரை

மீன லக்னம் 04.02 AM முதல் 05.42 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
 இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உறவினர்களின் வழியில் மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.  


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : ஆசைகள் நிறைவேறும். 
பரணி : மதிப்பு உண்டாகும்.
கிருத்திகை : ஆர்வமான நாள்.
---------------------------------------
ரிஷபம்

தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். நண்பர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தெளிவு ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம் 

கிருத்திகை : ஆதரவு ஏற்படும். 
ரோகிணி : கருத்து வேறுபாடுகள் விலகும். 
மிருகசீரிஷம் : தெளிவு ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்

விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். உறவினர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். வியாபாரம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். தனம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.
திருவாதிரை : பொறுமை வேண்டும். 
புனர்பூசம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------
கடகம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : புரிதல் உண்டாகும். 
பூசம் : தெளிவு ஏற்படும்.
ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை காக்கவும். சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். 


அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
கன்னி

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். ஆடம்பரப் பொருட்களால் சேமிப்பு குறையும். உறவினர்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். போட்டி நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.  
அஸ்தம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும். 
சித்திரை : பொறுப்புகள் மேம்படும். 
---------------------------------------
துலாம்

இலக்குகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். புது தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். சேமிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 

சித்திரை : குழப்பங்கள் விலகும்.
சுவாதி : ண்ணங்கள் மேம்படும். 
விசாகம் : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்

மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் உண்டாகும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிவீர்கள். செலவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : பக்குவம் ஏற்படும். 
அனுஷம் : அறிமுகம் உண்டாகும்.
கேட்டை : தடைகளை அறிவீர்கள்.
---------------------------------------
தனுசு

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில தனவரவுகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் விவேகம் வேண்டும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். சுபம் நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : நெருக்கம் அதிகரிக்கும். 
பூராடம் : விவேகம் வேண்டும்.
உத்திராடம் : மேன்மை ஏற்படும்.
---------------------------------------
மகரம்

செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்துச் செயல்படவும். நெருக்கமானவர்களால் அலைச்சல் ஏற்படும். தனம் சார்ந்த உதவிகளில் தாமதம் உண்டாகும். விவேகத்துடன் நடந்து கொள்வது நன்மதிப்பை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்லவும். நிதானம் வேண்டிய நாள். 


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : தாமதம் உண்டாகும். 
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும். 
---------------------------------------
கும்பம்

வாழ்க்கைத் துணைவரின் வழியில் அனுகூலம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பால் உற்சாகம் உண்டாகும். சகோதரர்களின் வழியில் ஆதாயம் அடைவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : அனுகூலம் ஏற்படும். 
சதயம் : லாபம் மேம்படும். 
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
மீனம்

தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும். 
உத்திரட்டாதி : உதவிகள் சாதகமாகும்.
ரேவதி : ஒத்துழைப்பு அதிகரிக்கும். 
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக