✴ கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன் குரு சமம் என்ற நிலையில் இருந்து அவர் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
✴ கல்வி அறிவு உடையவர்கள்.
✴ பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.
✴ வாக்குவன்மை உடையவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றும் திறமை உடையவர்கள்.
✴ குறைவாகவும் அதே சமயம் சரியாகவும் பேசும் குணம் உடையவர்கள்.
✴ பேச்சுக்களால் எதிரில் இருப்பவர்களை கவரக்கூடியவர்கள்.
✴ பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உடையவர்கள்.
✴ வாதாடுவதில் வல்லவர்கள்.
✴ நம்பிக்கைக்குரியவர்கள்.
✴ கிடைப்பதை கொண்டு மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள்.
✴ உண்மையான மற்றும் நேர்மையான வழிகளில் மட்டும் பொருள் ஈட்டக்கூடியவர்கள்.
✴ பயனற்ற வீண் செலவுகளை செய்வதில் விருப்பம் இல்லாதவர்கள்.
✴ தடையற்ற வருமானமும், பொருள் ஈட்டும் திறமையும் உடையவர்கள்.
✴ கொள்கை பிடிப்பு குணம் உடையவர்கள்.
✴ கோபம் கொள்ளுதல் என்பது மிகவும் அரிதாகும்.
✴ சிலருக்கு அரசியல் தொடர்பு உண்டாகும்.
✴ மற்றவர்களை ஏமாற்றும் எண்ணமில்லாதவர்கள்.
✴ தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழக்கூடியவர்கள். தர்ம சிந்தனைகளை கொண்டவர்கள்.
✴ எடுத்த முடிவுகளில் ஸ்திரமாக இருந்து செயல்படக்கூடியவர்கள்.
✴ சமயோகிதமாகவும், உறுதிப்பாட்டுடனும் கூடிய சிந்தனைகளை உடையவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக