Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 நவம்பர், 2020

இத படிச்சா கண்டிப்பா சிரிக்காம இருக்க மாட்டீங்க... என்னவா இருக்கும்?🤔 - ரிலாக்ஸ் ப்ளீஸ்...

----------------------------------------------------

படிங்க சிரிங்க...!

-----------------------------------------------------

இன்ஸ்பெக்டர் : என்னது, நீங்க எழுதிட்டு வர க்ரைம் தொடர் பத்தி நீங்களே புகார் தரணுமா?

கதாசிரியர் : ஆமாம் சார்... உண்மையான கொலையாளி யார்-னு எனக்கே தெரியல. சீக்கிரம் கண்டுபிடிச்சு சொல்லுங்க. கதையை முடிக்கணும்

இன்ஸ்பெக்டர் : 😳😳

---------------------------------------------------------------------------

ராமு : அந்த மரம் ஒரு கிராஜூவே

சோமு : அப்படியா!

ராமு : ஆமாம். அது பட்ட மரம்

சோமு : 😣��

---------------------------------------------------------------------------

வேலு : உங்க மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊத்தி குளிக்க வெக்கிறீங்

ராஜ் : அவன் துரு துரு-ன்னு இருக்கான் அதான்

வேலு : 😆

---------------------------------------------------------------------------

ஆரோக்கியமான வரிகள் !

---------------------------------------------------------------------------

 

கோபத்தை தவிருங்கள். இல்லாவிட்டால் ரத்த மண்டலமே பாதிப்படையும்

 

உணவில் சத்துக் குறைவைவிட, மனநல குறைவே நோய்களுக்கு மூலகாரணம்

 

உடலுக்கு உணவு சக்தி தருவதைப் போல, தனி மனித அமைதியே உலகிற்கு அமைதி தருகிற

---------------------------------------------------------------------------

படித்ததில் பிடித்தது...!

---------------------------------------------------------------------------

இல்லாதது எதுவோ, அது இனிமேல் இறைவன் கொடுப்பான் என்று நம்பிக்கையோடு இருங்கள்

 

தலையில் இருக்கும் வரை முடியை அழகுப்படுத்தி ரசிக்கும் மனிதன்.

அதுவே வெட்டப்பட்டு தரையில் விழுந்தபின் அருவருப்புடன் பார்ப்பான்..

எதுவாக இருந்தாலும் இருக்கும் இடத்தைப் பொருத்தே மதிப்பும், மரியாதையும்..

---------------------------------------------------------------------------

இன்றைய கடி...!

---------------------------------------------------------------------------

ரெண்டு பூச்சி Walking போச்சு. ஒரு பூச்சிக்கு ரொம்ப குளிருச்சு, இன்னொரு பூச்சிக்கு குளிருல... ஏன்

 

 

 

 

 

அது கம்பளி பூச்சி.🐛

 

ஒரு பையன் கிணத்துக்குள்ள இறங்கி படிச்சானாம்... ஏன்?

 

 

 

 

 

ஏன்னா அவன் ஆழமா படிக்கிறானாம்.😇

---------------------------------------------------------------------------

டங்கு ஸ்லிப் ஆகுதா

---------------------------------------------------------------------------

மெத்தையில் இருந்து விழுந்த அத்தை வாய்ப் பொக்கையாகி கை பைய்யும் பொத்தையாகி மெத்தையில் கிடந்த அத்தையை பார்க்க வந்தான் அத்தை மகன் சொத்தைப் பல் முத்தையன்

 

ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து குறை குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கினா

 

தேவியும், கோபியும் கிளைகளில் தாவி, ஏறி இறங்கி, இறங்கி ஏறி, ஏறி இறங்கி விளையாடினார்கள்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக