Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 நவம்பர், 2020

கூகுள் பே செயலியில் பணம் அனுப்பினால் கட்டணமா? உண்மை என்ன? கூகுள் பே விளக்கம்.!

கூகுள் பே இணையதளத்தில்,

அண்மையில் கூகுள் பே செயலியில் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணம் என்று அறிவிக்கப்பட்டது அமெரிக்காவில் மட்டுமே என்றும், இந்தியாவிலும் அப்படி எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சமீபத்தில் கூகுள் பே இணையதளத்தில், ஜனவரி மாதம் முதல் தளம் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்பு பணப் பரிமாற்றத்துக்குக் கட்டணம் விதிக்கப்போவதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எனவே இதனால் கூகுள் பே செயலியை பயன்படுத்த வேண்டுமா என இந்திய பயனர்கள் இடையே கேள்வி எழுந்தது என்று தான் கூறவேண்டும்.

ஆனால் தற்சமயம் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கட்டணங்கள் எல்லாம் அமெரிக்காவில் மட்டுமே, இந்தியாவில் கூகுள் பே மற்றும் வியாபாரங்களுக்கான கூகுள் பே செயலிகளில் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள பயனாளர்கள் யாருக்கும் கூகுள் பே மூலமாகப் பணம் அனுப்பினால் வழக்கம்போல கட்டணம் எதுவும் கிடையாது என்று கூகுள் பே நிறுவனம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இணையதளம் சார்ந்த கூகுள் பே வசதி தான் ஜனவரி மாதம் முதல் செயல்படாது. எனவே அவர்கள் புதிய கூகுள் பே செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கூகுள் பே செயலியானது அதிப்படியான மக்கள் பயன்படுத்தக் கூடிய பணப்பரிமாற்ற செயலி.

இந்த செயலி வழியாகப் பணப்பரிமாற்றம் செய்ய எந்தக் கூடுதல் கட்டணமும் கிடையாதென்பதாலும் இது கூகுள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதென்பதாலும் பலரது விருப்பத்திற்கும், நம்பிக்கைக்கும் உரிய செயலியாக இருந்து வருகிறது.

இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால், அமெரிக்காவில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இணையதளம் வாயிலான கூகுள்

பே மட்டுமே வரும் ஜனவரி மாதம் செயல்படாது என்றும், அதன் பயனாளர்கள் புதிய கூகுள் பே செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கட்டண அறிவிப்பு என்பது அமெரிக்காவிற்கு மட்டுமே பொருந்தும், இந்தியாவில் இந்த கூகுள் பே செயலியை தொடர்ந்து இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியாவில் கூகுள் பே போன்று, பேடிஎம், போன்பே, அமேசான் பே போன்ற செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த செயலிகள் அனைத்தும் சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக