லெனோவா நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் தொடரை டீஸ் செய்துள்ளது. அது வரவிருக்கும் புதிய ரெட்மி நோட் 9 மாடல்களை எதிர்கொள்ளும் என்பது போல் தெரிகிறது.
வருகிற நவம்பர் 26 ஆம் தேதி சீனாவில் சியோமி அறிமுகம் செய்யும் புதிய ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் முனைப்பின் கீழ் லெனோவா நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் தொடரை டீஸ் செய்துள்ளது.
சீன ஊடகமான வெய்போ வழியாக பதிவிடப்பட்டுள்ள டீஸர் புகைப்படம் வழியாக லெனோவா அதன்
வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களை உறுதி செய்துள்ளது. அந்த டீஸரை பார்க்கும் போதே, அது
ரெட்மியின் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களை குறிவைப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை வழியாக, லெனோவா நிர்வாணம் அதன் லெமன் தொடரை
மீண்டும் சந்தைக்குக் கொண்டுவரலாம் என்று ஊகிக்கப்படுகிறது. நிச்சயமாக அவைகள்
மலிவு விலை நிர்ணயம் கொண்ட மாடல்களாக இருக்கும் என்பதால், இவைகள் அடுத்த வாரம்
சீனாவில் அறிமுகமாகும் புதிய ரெட்மி நோட் 9 மாடல்களுக்கு எதிராக
போட்டியிடக்கூடும்.
வெய்போவில் வெளியிடப்பட்ட டீஸர் வரவிருக்கும் புதிய லெனோவா ஸ்மார்ட்போன் தொடர்
குறித்த எந்த குறிப்பிட்ட விவரங்களையும் வழங்கவில்லை. ஆயினும்கூட, இது மெல்லிய
பெஸல்லெஸ் கொண்ட மூன்று ஸ்மார்ட்போன்ளைக் காட்சிப்படுத்துகிறது. மேலும் “6
வருகிறது” என்றும் கூறுகிறது. மேலும் கூகுள் மொழிபெயர்ப்பின் படி, "மூன்று
வாள்கள் ஒன்றாக" என்கிற வரியும் வெளியான டீசர் புகைப்படத்தில் காணப்படுகிறது.
சியோமி நிறுவனம், அதன் ரெட்மி நோட் 9 தொடர் வெளியீடு சார்ந்த அழைப்பை வெய்போவில்
வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே லெனோவா தனது டீஸரையும் கொண்டு வந்ததும் இங்கே
குறிப்பிடத்தக்கது.
லெனோவா தனது புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்து எந்த விவரத்தையும்
இதுவரை வழங்கவில்லை. இருப்பினும், அதன் புதிய டீஸர் "வெளியான நேரத்தை"
அடிப்படையாக கொண்டால் நிறுவனம் தனது புதிய தொடர்களுடன் சியோமியின் ரெட்மிக்கு
கடுமையான போட்டியை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் லெனோவாவின் லெமன் தொடரின்
கீழ் அறிமுகமாகும் என்றும், அது மக்களை ஈர்க்க மலிவு விலை நிர்ணயத்தை பெறலாம்
என்றும் ஊகிக்கப்படுகிறது.
இந்நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் லெமன் பிராண்டட் ஸ்மார்ட்போன்களை
விற்பனை செய்தது, ஆனால் அந்தத் தொடரை சமீபத்திய காலங்களில் முற்றிலுமாக
நிறுத்தியது.
கிடைக்கப்பெற்ற சமீபத்திய அறிக்கைகளைப் பார்த்தால், லெனோவா நிறுவனம் அதன் மோட்டோ
ஜி 9 பவர் மாடலை வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் தொடரின் கீழ் மறுபெயரிடலுடன்
கொண்டு வரக்கூடும்.
இந்த தொலைபேசி US FCC தளத்தில் மாடல் நம்பர் XT2091-3 மற்றும் XT2091-8 உடன்
காணப்பட்டது. அதில் ஒன்று வரவிருக்கும் புதிய லெனோவா ஸ்மார்ட்போனாக இருக்கலாம்
என்று நம்பப்படுகிறது.
மற்றொரு மோட்டோ ஜி 9 பவர் மறுபாடானது சீனாவின் TENAA தளத்தில் காணப்பட்டுள்ளது.
அது 6.78 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே மற்றும் 5,640 எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களை
பரிந்துரைக்கிறது.
இருப்பினும், மோட்டோ ஜி 9 பவர் 6.8 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 6,000 எம்ஏஎச்
பேட்டரியைக் கொண்டுள்ளது. இது இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையிலான சில
வேறுபாடுகளைக் குறிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக