Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 நவம்பர், 2020

விவோ Origin OS அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?

விவோ Origin OS அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?

விவோ நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் விவோ நிறுவனம் FunTouchOS இன் வாரிசாக OriginOS ஸ்கின்னை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய மென்பொருள் சீனாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடப்பட்டது.

குறிப்பாக விவோ நிறுவனத்தின் இந்த புதிய மென்பொருள் ஒரு புதிய இன்டர்பேஸைக் கொண்டுவருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஒட்டுமொத்த அழகியலானது ஒரு கிரிட் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் எவர்-சேஞசிங் தகவலுடன் பல விட்ஜெட்களையும் வழங்குகிறது. பின்பு இதனை விவோ நிறுவனம் நானோ அலெர்ட்ஸ் என்று அழைக்கிறது.

இந்த புதிய ஓஎஸ்-ல் கடிகார வடிவமைப்பு மாறி உள்ளது. இப்போது அது வெவ்வேறு வண்ணங்களையும் அமைப்புகளையும் நிகழ்நேரத்தில் காண்பிக்கும் திறனை கொண்டுள்ளது. குறிப்பாக வெய்போ எனும் சீன ஊடகதளத்தின் வழியாக விவோ நிறுவனம் தனது ஒரிஜின் மென்பொருளை அறிவித்தது.

மேலும் இதில் செட் வால்பேப்பரின் அடிப்படையில் கடிகாரத்தை மாற்றும் திறனும் உள்ளது, பின்பு வெவ்வேறு வண்ணங்களையும் அமைப்புகளையும் காட்டும் திறனையும் கொண்டுள்ளது. இந்த ஒரிஜின் ஓஎஸ் புதிய அனிமேஷன்கள், அட்டகாசமான ஐகான்கள் மற்றும் முந்தைய தலைமுறையை விட வேகமாகவும் மென்மையாகவும் இருக்கும் இன்டர்பேஸை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் OriginOS-இன் ரோல்அவுட் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஸ்கின் கஸ்டம் அம்சங்களுடன் நிரம்பியுள்ளது, பின்பு இது விட்ஜெட்டுகளால் நிரப்பப்பட்ட கிரிட் போன்ற UI ஆகும். அதே சமயம் பல விட்ஜெட்களை ஹோம் ஸ்க்ரீனில் பேக் செய்து பயனர் விருப்பத்தின் அடிப்படையில் மறுசீரமைக்க உதவுகிறது. இந்த விட்ஜெட்டுகள் Huarong Road எனப்படும் sliding puzzle கேமால் ஈர்க்கப்படுகின்றன எனத் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இதனுடைய விட்ஜெட்டுகள் வடிவமைப்பை மாற்றி நேரடி தகவல்களைக் காண்பிக்கும் திறனையும் கொண்டுள்ளன. உதாரணமாக வானிலை ஆப் விட்ஜெட் ஆனது நிகழ்நேர சூழல் வெப்பமாக இருக்கிறதா அல்லது மேகமூட்டமாக இருக்கிறதா என்கிற தகவலை வழங்கும்.

அதேபோல் எஸ்எம்எஸ் ஆப் வசதியில் notification bubbles இருக்கும், அவை படிக்காத மெசேஜ்கள் எண்ணிக்கையைக் காண்பிக்கும். நானோ அலெர்ட்ஸ் என்று கூறப்படும் இந்த விட்ஜெட்டுகள் அவைகளை டேப் செய்வதின் மூலம் விரிவடைந்து கூடுதல் தகவல்களைக் காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ நிறுவனத்தின் புதிய ஒரிஜின் ஓஎஸ்-ல் சுமார் 26gesture combination-வசதி சேர்க்கப்பட்டுள்ளன பின்பு மொபைல் பேமண்ட்களுக்காக கீழே இருந்து வெளியேறும் ஒரு சூப்பர்கார்ட் அம்சமும் இதில் உள்ளது. பின்பு இதில் Behavioural wallpaper-களும் இடம்பெற்றுள்ளன. அவை பேக்கிரவுண்டில் நேரடி காட்சிகளை வழங்க வெளியில் நிகழும் வானிலைகளால் தூண்டப்படுகின்றன


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக