Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 14 டிசம்பர், 2020

இதிலும் இனி புதிய மாற்றம்.. ஜனவரி 1 முதல் காசோலைக்களுக்கான புதிய விதிகள்.. விவரம் இதோ..!

 மோசடிகள் குறையும்

ரிசர்வ் வங்கி சமீபத்தில் காசோலைகளை செலுத்துவதற்கு பே பாசிட்டிவ் சிஸ்டம் (positive pay system) என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ், 50,000 ரூபாய்க்கு மேலான காசோலைகளுக்குத் தேவையான தகவல்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கும். இது வாடிக்கையாளரின் விருப்பப்படி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த காசோலை (cheque) குறித்தான புதிய விதிகள் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்.

மோசடிகள் குறையும்

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகள் காசோலை கொடுப்பதை பாதுகாப்பானதாக்குவதற்கும், குறிப்பாக வங்கி மோசடிகளைத் தடுப்பதற்கும் இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. உண்மையில் இதன் மூலம் பெரும் மோசடிகள் தடுக்கப்பட வாய்ப்புண்டு. ஏனெனில் மீண்டும் ஒரு முறை வங்கி வாடிக்கையாளர்களிடம் தகவல்கள் உறுதிப்படுத்தப்படும்.

தகவல்களை உறுதிப்படுத்த வேண்டும்

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறையின் கீழ் காசோலையை வழங்குபவர் காசோலையின் தேதி, பெறுநரின் பெயர் மற்றும் பணம் செலுத்திய தொகையை மீண்டும் தெரிவிக்க வேண்டும். மேலும் காசோலை வழங்கும் நபர் இந்த தகவலை எஸ்எம்எஸ் (SMS), மொபைல் பயன்பாடு, இணைய வங்கி அல்லது ஏடிஎம் போன்ற மின்னணு வழிமுறைகள் மூலம் வழங்கலாம்.

தகவல் மிஸ்மேட்ச்

இதன் பிறகு காசோலை செலுத்தும் முன் மீண்டும் இந்த விவரங்கள் குறுக்கு சோதனை செய்யப்படும். அதில் ஏதேனும் தகவல் மிஸ்மேட்ச் ஆகிறது என்றால், அந்த பரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்படும். இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

கட்டாயமாக்கலாம்

மேலும் 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளுக்கும், காசோலைகளை வழங்கும் அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் வங்கிகள் இந்த புதிய நடைமுறையை பயன்படுத்தும். எனினும் 5 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட காசோலைகளைகளுக்கும் வங்கிகள் இந்த விதிமுறைகளை கட்டாயமாக்கலாம்.

விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சி.டி.எஸ்ஸில் பாசிட்டிவ் பே சிஸ்டத்தை உருவாக்கி, வங்கிகளுக்கு அதைக் கிடைக்கச் செய்யும். 50,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான காசோலைகளை வழங்கும். அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் வங்கிகள் இதை நடைமுறைப்படுத்தும். எஸ்எம்எஸ், வங்கிகளில் விளம்பரம் செய்தல் போன்றவை வழியாக இந்த முறை குறித்து, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!