Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 டிசம்பர், 2020

பேடிஎம்-ன் 30% பங்குகளை விற்கும் சீனா ஆன்ட் குரூப்.. எல்லாம் புரளி நம்பாதீங்க.. பதறும் பேடிஎம்!

 பேடிஎம்


இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் ஆன்லைன் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் நேற்று இந்தியாவின் குறு மற்றும் சிறு வியாபாரிகளுக்கு உதவும் விதமாக வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களிடம் இருந்து பேமெண்ட் பெறுவதற்காக வசூலிக்கும் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்தது.

இந்த அறிவிப்பு கோடிக்கணக்கான வியாபாரிகளை மகிழ்ச்சி அடையச் செய்த நிலையில் பேடிஎம் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு முக்கியச் செய்தி இன்று வெளியானது. இந்தச் செய்தி பெரிய அளவில் பரவுவதற்குள் பேடிஎம் உண்மையை உடைத்தது முதலீட்டாளர்களைக் காப்பாற்றியது.

இந்தியா - சீனா

இந்தியா - சீனா எல்லையில் இரு நாடுகளுக்கு மத்தியில் நடந்த தாக்குதல் எதிரொலியாக இரு நாடுகளும் மத்தியிலான நட்புறவும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் சீனா முதலீடுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒவ்வொரு முதலீடும் அரசு அனுமதியுடன் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் எனப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

பேடிஎம்

இதன் எதிரொலியாக இந்தியா - சீனா உறவில் முன்னேற்றம் இல்லாததைத் தொடர்ந்து சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான அலிபாபாவின் ஆன்ட் குரூப், பேடிஎம் நிறுவனத்தில் வைத்துள்ள 30 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இன்றைய மதிப்பீட்டில் பேடிஎம்-ன் 30 சதவீத பங்குகளை மதிப்பு 4.8 பில்லியன் டாலர்.

ஸ்டார்ட்அப் சந்தை

இந்த அறிவிப்பு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பேடிஎம் மற்றும் ஆன்ட் குரூப் உடனடியாக விளக்கம் அளித்துப் பதற்றத்தைக் குறைத்தது.

பேடிஎம் மற்றும் ஆன்ட் குரூப்

இந்தச் செய்தி குறித்துப் பேடிஎம் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'பங்கு விற்பனை குறித்து எந்த முதலீட்டாளர்கள் உடனும் பேடிஎம் நிர்வாகம் ஆலோசனை செய்யவில்லை. மேலும் பேடிஎம் நிர்வாகத்திற்குப் பங்குகளை விற்பனை செய்யும் திட்டமும் இல்லை' எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆன்ட் குரூப்

ஏற்கனவே சீனா மற்றும் ஹாங்காங்-ல் ஆன்ட் குரூப்-ன் 37 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ திட்டம் தடைப்பெற்ற நிலையில், இந்த ஐபிஓ 2022 வரையில் திரும்பவும் செய்ய முடியாத நிலைக்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் பங்குகளையும் விற்பனை செய்தால் இந்நிறுவனத்திற்கு இது பெரிய பின்னடைவாக இருக்கும்.

220 செயலிகள்

இரு நாட்களுக்கு மத்தியில் அடுத்தடுத்து பல பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், எல்லை பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காணப்படாமல் உள்ளது.

இந்த எல்லை பிரச்சனையின் எதிரொலியாக இந்தியாவில் இதுவரை சுமார் 220 சீன செயலிகளைத் தடை செய்துள்ளது குறிப்பிடத்தரக்கது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக