Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 17 டிசம்பர், 2020

Amazon-னின் Robotaxi: பெட்ரோல விடுங்க, இனி taxi ஓட்ட driver கூட வெண்டாம்

 

உலகில் போக்குவரத்தின் வழிமுறைகள் மாறப்போகின்றன. அனைத்தும் மிக விரைவாக புதுப்பிக்கப்படுகின்றன. வரப்போகும் விஷயங்கள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கின்றன. ஆனால் அந்த விஷயங்களும் இப்போது யதார்த்தமாகி வருகின்றன. அமெசான் ஒரு தனித்துவமான ரோபோடேக்சியை தயாரித்துள்ளது. 

அமேசானின் செல்ஃப் டிரைவிங் வாகன் கம்பனியான Zoox, இந்த ரோபோடாக்சியை டிசம்பர் 14 அன்று வெளியிட்டது. ஊடக செய்தியின்படி, நிறுவனம் முழு மின்சார அடிப்படையிலான மற்றும் டிரைவர் இல்லாத ரோபோடாக்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்பம்சம் மற்றும் படங்களை இங்கே காணலாம். 

இந்த ரோபோடாக்சியில் ஸ்டியரிங் இல்லை. அதில் நான்கு பேர் எதிர் எதிரே அமர முடியும். இதில் பயணிப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் அமர்வார்கள். இதில் டிரைவர் மற்றும் பயணிகளுக்கு தனி இருக்கைகள் இல்லை.

இந்த ரோபோடாக்சி கார் மணிக்கு 75 மைல்கள் வரை பயணிக்க முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால், இது 16 மணி நேரம் வரை நீடிக்கும். பாதுகாப்பிற்காக, இந்த காரில் நான்கு இருக்கைகளுக்கு ஏர்பேக்குகளும் உள்ளன.

ரோபோடாக்சியின் நான்கு மூலைகளிலும் கேமராக்கள், ரேடார் மற்றும் லிடார் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன், இந்த கார் சாலையில் 270 டிகிரி கண்காணிக்க முடியும்.

நெவாடாவின் லாஸ் வேகாஸ், கலிபோர்னியாவின் ஃபாஸ்டர் சிட்டி மற்றும் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ ஆகிய மூன்று நகரங்களில் தற்போது ரோபோடாக்சியை பரிசோதித்து வருவதாக அமேசான் ஜூக்ஸ் கூறுகிறது.

அமேசான் செல்ப் டிரைவிங் ரோபோடாக்சி, ஆல்பாபெட்டின் வேமோ, ஜிஎம்ஸின் குரூஸ், உபெர் மற்றும் டெஸ்லா கார்களை விட பல புதிய மற்றும் சிறப்பம்சம் வாய்ந்த அம்சங்களைப் பெற்றுள்ளது. இதனால் அம்சங்களின் அடிப்படையில் இது மற்ற கார்களுக்கு கடும் போட்டியை அளிக்கக்கூடும். 

(Photo Courtesy: Zoox Official website)

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக