----------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
----------------------------------------------------
முதலாளி : வேலைக்கு சேரும்போது மாதம் ரூபாய் 5000 சம்பளம். ஆறாவது மாதத்திலிருந்து சம்பளம் ரூபாய் 8000.
கமல் : அப்ப நான் ஆறாவது மாதமே வேலைக்கு சேந்துக்கிறேன் சார்.
முதலாளி : 😳😳
----------------------------------------------------
கணவன் : எதுக்கு விமலா... பத்து டீஸ்பூன்?
மனைவி : சாம்பாருக்கு பத்து டீஸ்பூன் மிளகாய்தூள் போடனும்னு போட்டிருக்கே அதான்...
கணவன் : 😛😛
----------------------------------------------------
ஆங்கிலம் அறிவோம்...!!
----------------------------------------------------
1. செக் - காசோலை
2. சக்சஸ் - வெற்றி
3. பீரோ - இழுப்பறை
4. ப்ரீவ் கேஸ் - குறும்பெட்டி
5. அப்பாயின்ட் மென்ட் - பணிஅமர்த்தல்
----------------------------------------------------
புலிக்கு கல்யாணம்!
----------------------------------------------------
ஒரு புலி கல்யாணம் பண்ணிக்கிட்டு ரிஷப்ஷன் வெச்சுது.
எல்லா விலங்குகளும் விருந்து சாப்பிட்டு விட்டு, புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு.
மாப்ள புலிக்கோ கர்வம் தாங்கல. திடீர்னு ஒரு பூனை மட்டும் சரசரன்னு புலிகிட்ட போயி கைகொடுத்து வாழ்த்து சொல்லிடுச்சு.
புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு. பூனையைப் பார்த்து கர்ஜனையோட, 'ஏய் இத்தனை பேரு என்னைய தூரம் நின்னு வாழ்த்திட்டு போறாங்க.. உனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட வந்து வாழ்த்து சொல்லுவ" நான் புலிடான்னு சொல்லுச்சாம்...
அந்த பூனையோ கெக்க பிக்கனு சிரிச்சிட்டே... அடேய் கிறுக்கு பயலே! நானும் கல்யாணத்துக்கு முன்ன புலிதான்டா-ன்னு சொல்லிட்டு ஓடி போச்சு..!
திருமணத்திற்கு பின் புலி கூட, பூனையாக மாறும்...😆😆
----------------------------------------------------
விடுகதைகள்...!!
----------------------------------------------------
1. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். அவன் யார்?
2. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான். அவன் யார்?
3. கல்லில் காய்க்கும்பூ, தண்ணீரில் மலரும்பூ. அது என்ன பூ?
4. கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை! வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம். அது என்ன?
5. பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?
விடைகள் :
1. தென்னை
2. அருவி
3. சுண்ணாம்பு
4. தேங்காய்
5. வானொலி பெட்டி
பொழுதுபோக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக