Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 டிசம்பர், 2020

தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்.! இன்றொரு புதிய அம்சம் அறிமுகம்.!

 கூட கணக்கில்லாமல் இருக்கலாம்

சமூகவலைதள பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கோவிட்-19 பரவலில் தொடங்கி ஏராளமானோர் தங்களது பெரும்பாலான நேரத்தை சமூகவலைதளங்களில்தான் செலவிட்டு வருகின்றனர்.

வங்கியில் கூட கணக்கில்லாமல் இருக்கலாம் ஆனால் ஏதேனும் சமூகவலைதளங்கள் ஒன்றிலாவது கணக்கில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. சமூகவலைதள பயன்பாட்டுக்கு என்றே ஏணையோர் ஸ்மார்ட்போன்களை வாங்கி வருகின்றனர். சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்றே கூறலாம்.

அதிலும் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் கொண்டு வரும் ஒவ்வொரு அம்சமும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. அதேபோல் இந்த வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் வந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.


குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு அம்சமும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. அதன்படி இப்போது வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. இந்த புதிய அப்டேட் வாட்ஸ்அப்-ல் கஸ்டம் வால்பேப்பர், ஸ்டிக்கர், எமோஜி என பல்வேறு வசதிகளை வழங்குகிறுது.

அதாவது பயனர்கள் வால்பேப்பர் கேலரியில் இருக்கும் படங்களை வெவ்வேறு சாட்களில் வால்பேப்பராக செட் செய்து கொள்ளலாம். இத்துடன் தற்போதைய டூடுள் வால்பேப்பர்களின் நிறமும் புது அப்டேட்டில் மாற்றப்பட்டு இருக்கிறது.

பின்பு வால்பேப்பர் சார்ந்த மாற்றங்கள் மட்டுமின்றி ஸ்டிக்கர்கள் டெக்ஸ்ட் மற்றும் எமோஜி மூலம் தேடும் வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாட்ஸ்அப் உலக சுகாதார மையத்தின் Together at Home ஸ்டிக்கர் பேக் ஒன்றை செயலியில் வழங்கி உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

குறிப்பாக இந்த ஸ்டிக்கர் பேக் பயனர்களை கொரோனாவைரஸ் பரவல் காலக்கட்டத்தில் வீட்டினுள் இருக்க வலியுறுத்தும் ஸ்டிக்கர்களை கொண்டிருக்கிறது. அதேபோல் கஸ்டம் வால்பேபர் அம்சமும் வழங்கப்பட்டு உள்ளது, இதை கொண்டு ஒவ்வொரு சாட்களுக்கும் பிரத்யேக வால்பேப்பர்களை செட் செய்து கொள்ள வழி செய்கிறது.

 


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக