Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 டிசம்பர், 2020

ரயில் பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் நிலையை இனி நொடியில் வாட்ஸ்அப் மூலம் செக் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

வாட்ஸ்அப் மூலம் பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் நிலை


இந்தியாவில் நீண்டகாலமாகக் காத்திருப்போர் பட்டியல் சிக்கலைத் தீர்க்கும் இந்தியாவின் முதல் WL & RAC இயங்குதளமான ரெயிலோஃபி (Railofy) இன்று ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிகழ்நேர பிஎன்ஆர் நிலை மற்றும் ரயில் பயணத் தகவல்களை ரயில் பயணிகளின் வாட்ஸ்அப் எண்ணிற்கே நேரடியாக பகிர்ந்து கொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் நிலை

இந்த அம்சம் பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் நிலை மற்றும் ரயில் தாமத தகவல்கள், லைவ் ஸ்டேஷன் நோட்டிபிகேஷன் போன்ற பிற ரயில் தகவல்களைத் தேடுவதற்கான பல பயன்பாடுகள் மற்றும் வலைத்தளங்களின் ஒட்டுமொத்த நேர அனுபவத்தை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நொடியில் இனி PNR ஸ்டேட்டஸ்

இந்த அம்சம் பயனரின் 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை ஒரு முறை மட்டும் +919881193322 என்ற வாட்ஸ்அப் எண்ணுடன் பகிர்ந்து கொண்டால் போதுமானது. உங்கள் பயணசீட்டின் PNR எண் நிலையை நொடியில் இனி தெரிந்துகொள்ளலாம்.

1 கோடிக்கும் மேலான மாதாந்திர தேடல்

Railofy நிறுவனத்தின் கூற்றுப்படி, 'ஒரு பொதுவான ஐ.ஆர்.சி.டி.சி பயனர் தனது பி.என்.ஆர் நிலையை பயண தேதிக்கு முன்னர் சுமார் 10 முதல் 20 முறை சரிபார்க்கிறார், இதன் விளைவாக கூகிளில் பி.என்.ஆர் நிலைக்கான 1 கோடிக்கும் மேலான மாதாந்திர தேடல்கள் கிடைக்கின்றது'. இதை எளிமையாக்க, இந்த சேவையின் மூலம், பயணிகள் தங்கள் வாட்ஸ்அப் எண்ணில் பி.என்.ஆர் நிலையின் அப்டேட்களைப் உடனடியாக பெறுவார்கள்.

ரயில் தாமத தகவல்களையும் அறியலாமா?

இந்த அம்சம் பயனர் ரயிலில் ஏறுவதற்கு முன்பு ரயில் தாமத தகவல்களையும் வழங்குகிறது, எனவே பயணிகள் ரயில் நிலையத்தை எப்போது அடைய வேண்டும் என்று தெரிந்துகொள்வார்கள். ரயிலுக்குள் இருக்கும்போது, ​​அடுத்த வரவிருக்கும் நிலையம் குறித்த தகவலையும் இந்த அம்சம் பயணிகளுக்கு தெரிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இனி பயணிகளுக்கு தேவைப்படும் தகவல்கள் வாட்ஸ்அப் மூலம் நொடியில் கிடைக்கும்.

மலிவு விலையில் பயணிக்க

செப்டம்பர் 2020 இல் தொடங்கப்பட்ட ரெயில்ஃபோயின் யுஎஸ்பி, ரயில்வே டிக்கெட் விலைக்கு நெருக்கமான விலை புள்ளிகளில் மாற்று பயணத்தை வழங்குகிறது. இது பெரும்பாலான இந்தியர்களுக்கு வசதி அல்லது நேரத்திற்கு சமரசம் செய்யாமல் மலிவு விலையில் பயணிக்க அனுமதிக்கிறது. பயணிகள் தங்களது டிக்கெட்டுக்கு எதிராக ரெயிலோஃபி பயன்பாட்டில் இருந்து சராசரியாக ரூ .50 முதல் தொடங்கி 200 ரூபாய் வரை பயண பாதுகாப்பை பெறலாம். 


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக