Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 டிசம்பர், 2020

டாபர், பதஞ்சலி உட்பட 13 பிராண்டுகளின் தேன் தரமற்றது: CSE

 உணவு கலப்படம்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பல முன்னணி பிராண்டுகளின் தேன் உண்மையான தேன் அல்ல, சர்க்கரை பாகு அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளது என சுற்றுச்சுழல் கண்காணிப்பு அமைப்பான சென்டர் பார் சைன்ஸ் அண்ட் என்விரான்மென்ட் (CSE) அமைப்பு தெரிவித்துள்ளது.

CSE அமைப்பின் உணவு ஆராய்ச்சியாளர்கள் தேனின் தரத்தை பரிசோதனை செய்யச் சுமார் 13 பிராண்டுகளின் தேன்-ஐ தேர்வு செய்துள்ளனர். இந்தப் பரிசோதனையில் 77 சதவீத தேன், அதாவது 22 டெஸ்ட் சேம்பிள்களில் வெறும் 5 சேம்பிள் மட்டுமே அனைத்து விதமான சோதனைகளிலும் வெற்றி அடைந்துள்ளது.

மீதமுள்ள 17 டெஸ்ட் சேம்பிள்கள் (77 சதவீதம்) தோல்வியை அடைந்துள்ளது.

முக்கியப் பிராண்டுகள்

சுற்றுச்சுழல் கண்காணிப்பு அமைப்பான சென்டர் பார் சைன்ஸ் அண்ட் என்விரான்மென்ட் (சிஎஸ்ஈ) அமைப்பு செய்த தரத்தின் சோதனையில் டாபர், பதஞ்சலி, பைதியநாந்த், ஜன்டு, ஹிட்கரி, ஏபிஸ் ஹிமாலய ஆகிய பிராண்டுகளின் தேன் NMR (Nuclear Magnetic Resonance) சோதனையில் தோல்வி அடைந்துள்ளது.

முதல் பரிசோதனை

சென்டர் பார் சைன்ஸ் அண்ட் என்விரான்மென்ட் (சிஎஸ்ஈ) அமைப்பு முதலில் குஜராத்தில் இருக்கும் தேசிய பால் பொருள் வளர்ச்சி அமைப்பில் இருக்கும் உணவு ஆராய்ச்சி மையமான CALF சோதனை கூடத்தில் இதே 13 பிராண்டுகளின் தேனின் தரத்தை ஆய்வு செய்தது.

அப்போது சில சிற பிராண்டுகள் மட்டுமே C4 சர்க்கரை சோதனையில் தோல்வி அடைந்தது.

NMR சோதனை

ஆனால் இதே பிராண்டுகளின் தேன் உலக முழுவதும் தேனின் தரப் பரிசோதனைக்காகப் பயன்படுத்தும் NMR சோதனையைச் செய்யும் போது, தேர்வு செய்யப்பட்ட 13 பிராண்டுகளில் வெறும் 3 பிராண்டுகளின் தேன் மட்டுமே இச்சோதனையில் தேர்வாகியுள்ளது.

இந்தச் சோதனை இந்தியாவில் செய்யப்படாமல் ஜெர்மனியில் NMR சோதனைக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தில் செய்யப்பட்டு உள்ளது.

உணவு கலப்படம்

தேனில் கலப்படம் இருப்பதை விடவும், அதைக் கண்டுப்பிடிக்க முடியாத வகையில் கலப்படம் செய்யப்படுவது தான் தற்போது முக்கியப் பிரச்சனையாக உள்ளது. தற்போது தேனில் கலக்கப்பட்ட சர்க்கரை பாகு, சாதாரணச் சர்க்கரை பாகு அல்ல சோதனையில் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சர்க்கரை பாகு எனச் சிஎஸ்ஈ அமைப்பின் உணவு பாதுகாப்பு மற்றும் நச்சுக்கள் பிரிவின் தலைவர் அமித் குரானா தெரிவித்துள்ளார்.

சீனா

சிஎஸ்ஈ அமைப்பு சீனா வர்த்தகத் தளத்தை ஆய்வு செய்ததில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க முடியாத fructose சிரப் விற்பனை செய்கிறது. குறிப்பாக C3 மற்றும் C4 சோதனைகளை ஏமாற்றும் என விளம்பரத்துடன் விற்பனை செய்யப்படும் fructose சிரப் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ரகசிய ஆய்வு

சிஎஸ்ஈ அமைப்பின் மூத்த தலைவர் Sunita Narain செய்த ரகசிய ஆய்வில், சீன நிறுவனம் தேனில் 50 முதல் 80 சதவீதம் fructose சிரப்-ஐ கொண்டு கலப்படம் செய்தாலும் சோதனையில் கண்டு பிடிக்க முடியாது எனச் சிஎஸ்ஈ அமைப்பிற்குச் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து இந்த fructose சிரப் பெயின்ட் மூலப்பொருளாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது எனச் சுனிதா தெரிவித்துள்ளார்.

டாபர்

இந்நிலையில் டாபர் நிறுவனம் தங்களது தேன் NMR சோதனையில் வெற்றிபெற்று உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சிஎஸ்ஈ அமைப்பின் அறிவிப்புகளை எதிர்த்துள்ளது.

சோதனையில் வெற்றி

சிஎஸ்ஈ அமைப்பின் 13 பிராண்டின் தேன் சோதனையில் சபோலா, மார்க்பெட்சோனா, நேச்சர்ஸ் நெக்டார் ஆகிய 3 பிராண்டுகளின் தேன் மட்டுமே வெற்றி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக