Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 டிசம்பர், 2020

இந்த மாதமே வெளி வருகிறாரா சசிகலா: பரிசீலனையில் கோரிக்கை

 இந்த மாதமே வெளி வருகிறாரா சசிகலா: பரிசீலனையில் கோரிக்கை

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு கால சிறைத்தண்டனை அனுபவித்து வரும் வி.கே சசிகலா முன்னர் தெரிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே விடுதலை ஆகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைந்த தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் விடுதலை குறித்து கடந்த சில நாட்களாக பல ஊகங்கள் எழும்பிக்கொண்டிருக்கின்றன.

வி.கே.சசிகலா, சிறையில் இருந்து விரைவான விடுதலையை கோரியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பெங்களூருவில் (Bengalore) உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, சிறப்பு நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர் 2021 ஜனவரி 27 அன்று வெளியே வருவார் என்று கூறப்பட்டிருந்தது.

எனினும், தனது சிறைத் தண்டனையிலிருந்து தன்னை விரைவில் விடுவிக்க அவர் விண்ணப்பித்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு தெரிவித்தன.

சிறையில் சசிகலா (Sasikala) அவர் கடைபிடித்த நன்நடத்தை, கன்னட மொழியை கற்றுக்கொண்டது மற்றும் பிற காரணங்களுக்காக அவர் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே தன்னை விடுதலை செய்யுமாறு சிறை நிர்வாகத்திடம் கோரியுள்ளார் என சசிகலாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டு துவக்கத்திற்குள் அவர் சிறையிலிருந்து வெளி வந்துவிடுவார் என அவரது உறவினர் வட்டங்களிலும் கட்சி வட்டங்களிலும் வலுவாக பேசப்பட்டு வருகிறது.

சிறை அதிகாரிகள் அவரது விண்ணப்பத்தை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

"அவர் தனது சிறைத் தண்டனையை குறைப்பதற்கும் விரைவான விடுதலைக்கும் விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் பரிசீலனைக்கு துறைத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ.-க்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அதிகாரிகள் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் இருவருக்கும் எதிரான நீதிமன்ற விசாரணைக்கு பிறகு, அவர் பிப்ரவரி 15, 2017 அன்று கர்நாடக (Karnataka) நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் பரப்பனா அக்ரஹாரா மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அவரது இரண்டு உறவினர்களும் நான்கு ஆண்டுகள் எளிய சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் மூவருக்கும் தலா 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக இருந்த ஜெயலலிதா (J Jayalalitha) 2016 ல் இறந்தார்.

நிபந்தனைகளின்படி, ஒவ்வொரு மாதமும் சிறையில் நல்ல நடத்தைக்கு மூன்று நாட்கள் நிவாரணம் கிடைக்கிறது. இதுவரை சசிகலா 43 மாதங்களை நிறைவு செய்துள்ளார். அவரது நன்நடத்தை காரணமாக அவருக்கு சட்டப்படி 135 நாட்களுக்கான சிறைவாசம் குறைக்கப்படலாம்.  

அடுத்த ஆண்டு தமிழகத்தில் (Tamil Nadu) சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், சசிகலாவின் விடுதலை தேர்தல் களத்திலும் கூட்டணிகளிலும் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவரது விடுதலை பல கட்சிகளுக்கு பதட்டத்தையும் பலருக்கு பலத்தையும் அளித்துள்ளது. முடிந்தவரை விரைவாக சசிகலா வெளியே வந்து தேர்தல் களத்தில் முனைப்புடன் இறங்குவார் என அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்கள்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக