Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 டிசம்பர், 2020

மிக எளிதாக பணம் சம்பாதிக்கலாம்: பணம் சம்பாதிக்க உதவும் சிறந்த செயலிகள் இதோ!

மிக எளிதாக பணம் சம்பாதிக்கலாம்: பணம் சம்பாதிக்க உதவும் சிறந்த செயலிகள்

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு பிரதான தேவையாக மாறி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பள்ளிகள், அலுவலகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்புகள், சமூகவலைதள பயன்பாடு என பல்வேறு தேவைக்கு ஸ்மார்ட்போன்கள் பிரதான தேவையாக இருந்தது.

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடுகள் எனும்போதே அதற்கு இணையதேவை என்பது தவரிக்கமுடியாத ஒன்று. கொரோனா பரவல் காரணமாக பலரும் வேலையிழந்து வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டது. அதேபோல் வீட்டில் இருந்தே பணம் ஈட்டுவதற்கான பணிகளை பலரும் தேடத் தொடங்கினர். இதில் பல பயன்பாடுகள் பணம், கேஷ்பேக் மற்றும் வெகுமதிகளை ஈட்ட அனுமதிக்கிறது.

பல பயன்பாடுகள் பணம் சம்பாதிக்க தங்களை அனுமதிக்கிறது. இதில் சில பயன்பாடுகள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயன்பாடுகளில் முன்னதாகவே கிடைக்கிறது. பணம் ஈட்ட அனுமதிக்கும் பயன்பாடுகள் சிலவற்றை கீழே காணலாம்.

ட்ரூ பேலன்ஸ் (True Balance)

ட்ரூ பேலன்ஸ் பயன்பாடானது குருகிராம் பகுதியை சேர்ந்த மொபைல் வாலட் நிறுவனமான பேலன்ஸ் ஹீரோ தயாரித்துள்ளது. தொலைபேசி அழைப்புகள் மற்றும் தரவை சரிபார்க்க இந்த பயன்பாடு பயன்படுத்தப்படுகிறது. பயனர்கள் இந்த சேவையில் முதலீடு இல்லாமல் உண்மையான இருப்புத் தொகையை சம்பாதிக்கலாம். இந்த பயன்பாட்டை பதிவிறக்கி அதில் காட்டப்படும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதேபோல் தங்களது மொபைல் எண், கடவுச்சொல் உள்ளிட்டவையை உள்ளிட வேண்டும். அதன்பின் பண போனஸ் கிடைக்க ஆரம்பிக்கும்.

ரோஸ் தன் (Roz Dhan)

ரோஸ் தன், சிறந்த பணம் சம்பாதிக்கும் பயன்பாடுகளில் ஒன்றாகும். இந்த பயன்பாடு 10 மில்லியன் பயனர்களுக்கு அதிகமானோரால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கேம்களை விளையாடுவதற்கும், கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், செய்திகளைப் படிப்பதற்கும் அனுமதிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்கலாம். இதில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளை பூர்த்தி செய்ய வேண்டும். பின் தினசரி 20 முதல் 50 நாணயங்கள் வரை பெறலாம்.

லோகோ (LOCO)

Roz Dhan பயன்பாட்டை போன்றே லோகோ பயன்பாடும் பயனர்களை பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறது. இது முற்றிலும் இலவசமான பயன்பாடாகும். இந்த பயன்பாடானது பெங்காலி, இந்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளின் அணுகல் கிடைக்கிறது. இதில் கேம்கள் விளையாடி பணம் சம்பாதிக்கலாம். அதோடு இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன்மூலம் பேடிஎம் வாலட்டில் நேரடியாக பணம் சம்பாதிக்க இந்த பயன்பாடு அனுமதிக்கிறது.

மிஷோ பயன்பாடு (Meesho APP)

ரீசேல் எனப்படும் மறுவிற்பனை பயன்பாடு இதுவாகும். இதில் நாட்டில் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்று. இந்த பயன்பாடானது வணிகம் செய்ய விரும்புவோருக்கு சிறந்த தேர்வாகும். இந்த செயலியானது பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் படங்களை பகிர அனுமதிக்கிறது. இந்த செயலியானது ரூ.25,000 வரை சம்பாதிக்க அனுமதிக்கிறது.

பண பரிவர்த்தனை செயலிகள்

பல டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலிகள் பண பரிமாற்ற சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த பணபரிவர்த்தனை செயலிகள் தங்களது பயனர்களுக்கு பண பரிமாற்றம் செய்யும் கேஷ் ரிவார்ட் வழங்குகிறது. கூகுள் பே, அமேசான் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட பயன்பாடுகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஸ்க்ரேட்ச் கார்டுகள் மூலம் பணம் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது.



 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக