Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 டிசம்பர், 2020

அடடே இது தெரியாம போச்சே.! 'டூ நாட் டிஸ்டர்ப்' மோடில் இவ்வளவு பயன் இருக்கா..?

Do not disturb mode பற்றிய குழப்பம், சந்தேகம் மற்றும் கேள்விக்கான பதில்..

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் 'டூ நாட் டிஸ்டர்ப் மோடு (Do not disturb mode)' பற்றித் தெரிந்திருக்கும், இன்னும் சிலருக்கு இந்த அம்சம் எதற்காக இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்திருக்கும். யாரும் என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்றால் நான் மொபைலை சைலென்டில் போட்டுவிடுவேனே, பிறகு எதற்கு இந்த Do not disturb mode என்ற கேள்வி எல்லாம் சிலருக்கு எழுந்திருக்கக்கூடும். இதற்கான தெளிவான பதில் என்ன என்பதைப் பார்க்கலாம்

Do not disturb mode பற்றிய குழப்பம், சந்தேகம் மற்றும் கேள்விக்கான பதில்..

முதலில் Do not disturb mode பற்றி பார்ப்பதற்கு முன்பு, சைலன்ட் மோடு மற்றும் ஏரோபிளேன் மோடு உடன் இதை ஒப்பிட்டுப் பார்த்துவிட்டால் உங்களுக்கு இருக்கும் சந்தேகம் பாதி தீர்ந்துவிடும். சைலன்ட் மோடு என்பது காலம் காலமாக இருக்கும் ஒரு அம்சம், இது எப்படி செயல்படும்? எதற்காகப் பயன்படுத்தப்படும் என்பதெல்லாம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் சிலருக்காகத் தெளிவான கருத்தைப் பார்த்துவிடுவோம்

சைலன்ட் மோடு vs ஏரோபிளேன் மோடு vs டூ நாட் டிஸ்டர்ப் மோடு

சைலன்ட் மோடு, ஏரோபிளேன் மோடு மற்றும் டூ நாட் டிஸ்டர்ப் மோடு ஆகிய மூன்று மோடுகளுக்கும் இடையில் ஒரு மெலிசான கொடு போன்ற வித்தியாசம் தான் இருக்கிறது. இதை தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் தான் சிலருக்குக் குழப்பம் ஏற்படுகிறது. சரி, இப்பொழுது சைலன்ட் மோடு பற்றி பார்க்கலாம், சைலன்ட் மோடை நீங்கள் ஆகிட்டிவேட் செய்தால் உங்கள் போனிற்கு ரிங் டோன் அல்லது வைப்ரேஷன் ஆகிய இரண்டு மட்டும் செயல்படாது.

சைலன்ட் மோடு இதை மட்டும் தான் செய்யும்..

ஆனால், உங்கள் போனிற்கு வரும் அனைத்து வகையான வாய்ஸ் கால், வீடியோ கால், எஸ்எம்எஸ் மற்றும் பல ஆப்ஸ் நோட்டிபிகேஷன் அனைத்தும் உங்கள் போனிற்கு சத்தமில்லாமல் வந்துகொண்டே தான் இருக்கும். சைலன்ட் மோடில் இருக்கும் பொழுது உங்கள் டிஸ்பிளேவில் அழைப்பு தகவல் மற்றும் நோட்டிபிகேஷன் தகவல் காண்பிக்கப்படும். இதனால் உங்களுக்கு அழைப்பு வருவது டிஸ்பிளே ஆன், ஆஃப் மூலம் தெரியவரும்.

ஏரோபிளேன் மோடு இதற்காக தான்..

ஏரோபிளேன் மோடு என்பது விமானத்தில் பயணிக்கும் பொழுது பயன்படுத்தப்படும் அம்சமாகும். இந்த மோடை நீங்கள் ஆக்டிவேட் செய்த உடன் உங்களின் நெட்வொர்க் சேவை துண்டிக்கப்படும். இதனால், உங்களுக்கு அழைப்போ அல்லது மெசேஜ் நோட்டிபிகேஷனோ எதுவும் வராது. மற்றபடி போனில் படம் பார்ப்பது, பாடல் கேட்பது, ஆப்லைன் கேம்ஸ் விளையாடுவது போன்ற செயல்களை நீங்கள் செய்யமுடியும். ஏரோபிளேன் மோடு ஆஃப் செய்தால் மீண்டும் நெட்வொர்க் கிடைத்துவிடும்.

டூ நாட் டிஸ்டர்ப் மோடில் இப்படி ஒரு பயனா?

டூ நாட் டிஸ்டர்ப் மோடு பற்றி இப்பொழுது பார்க்கலாம், இந்த மோடு உங்கள் போனிற்கு வரும் நோட்டிபிகேஷன் மற்றும் அழைப்புகளை உங்கள் கவனத்திற்கு முற்றிலுமாக காட்டாமல் பார்த்துக்கொள்ளும். நீங்கள் எப்போது, எவ்வளவு மணி நேரத்திற்கு ​டிஸ்டர்ப் செய்யப்படாமல் இருக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும் இதில் உங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் முதல் பல மணிநேரம் வரை நீங்கள் இந்த டூ நாட் டிஸ்டர்ப் மோடு அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

இதன் சிறப்பு என்ன தெரியுமா?

இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், டூ நாட் டிஸ்டர்ப் மோடு ஆக்டிவேட்டில் இருக்கும் போது கூட உங்களுக்கு பிடித்தமானார்கள் அல்லது உங்களுக்கு மிகவும் முக்கியமான ஸ்டார் காண்டாக்ட் நபர்களிடம் இருந்து முக்கிய அழைப்புகள் வந்தால் அதை மட்டும் உங்களுக்கு தெரியப்படுத்தும் அம்சமும் இதில் உள்ளது. எந்த ஆப்ஸின் நோட்டிபிகேஷன் காண்பிக்கப்பட வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை முடிவு செய்யவும் உங்களுக்கு அனுமதி உள்ளது.

உங்களின் விருப்பம் படி செயல்படும் டூ நாட் டிஸ்டர்ப் மோடு

டூ நாட் டிஸ்டர்ப் மோடை உங்களுக்கு விரும்பும்படி நீங்கள் மாற்றி அமைத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். டிஸ்பிளேவையும் சவுண்டையும் முற்றிலுமாக ஆஃப் செய்து வைத்துக்கொள்ளவும் வசதி உள்ளது. நீங்கள் செட் செய்யும் நேரம் முடிந்ததும் டூ நாட் டிஸ்டர்ப் மோடு தானாகவே ஆஃப் ஆகிவிடும் என்பதை மறக்கவேண்டாம். இப்பொழுது, இந்த மூன்று மோடுகளை பற்றி உங்களுக்கு நல்ல புரிதல் கிடைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 



 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக