Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 3 டிசம்பர், 2020

இந்த லிஸ்ட்ல இருக்குற Samsung போன் உங்ககிட்ட இருக்கா? அப்போ ஒரு குட் நியூஸ்! s

 Galaxy S20 Series Could Receive Final One UI 3.0 Update Soon


சாம்சங் நிறுவனம் புதிய ஒன் யுஐ 3.0 அப்டேட்டை பெறும் அதன் ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி இசட் போல்ட் 2 மற்றும் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ராவில் ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான ஒன் யுஐ 3.0 பீட்டா அப்டேட்டை சில காலமாக சோதித்து வருகிறது.

இந்நிலைப்பாட்டில், சாம்சங் நிறுவனம் தனது One UI 3.0 ஸ்டேபிள் அப்டேட்டிற்கு எந்தெந்த சாம்சங் மாடல்கள் தகுதியானவை என்கிற பட்டியலோடு சேர்த்து, குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஒன் யூஐ 3.0 அப்டேட் ஆனது எப்போது வரும் என்கிற டைம்லைன் விவரங்களையும் பகிர்ந்துள்ளது.


மேலும் வெளியான ஒன் யுஐ 3.0 அப்டேட் அட்டவணயானது எகிப்துக்கானது என்பதை முன்னரே குறிப்பிட விரும்புகிறோம் மற்றும் இந்த அப்டேட் வெளியீட்டு அட்டவணை மற்ற நாடுகளுக்கு வேறுபட்டிருக்கலாம்.

ஆனால் நல்ல விடயம் என்னவென்றால், இதன் வழியாக எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ஒன் யுஐ 3.0 அப்டேட்டை பெறும் என்கிற விவரத்தை நா அறிந்துகொள்ள முடியும்.


எகிப்துக்கான ஒன் யுஐ 3.0 அப்டேட் அட்டவணை Samsung community forum வழியாக பகிரப்பட்டுள்ளது, அதன்படி கேலக்ஸி எஸ் 20, கேலக்ஸி எஸ் 20 + மற்றும் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா உள்ளிட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 20 தொடர்கள் இந்த மாதத்திலிருந்தே அப்டேட்டைப் பெறும்.

இவற்றைத் தொடர்ந்து 2021 ஜனவரியில் சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 2, கேலக்ஸி இசட் பிளிப், கேலக்ஸி எஸ் 10 சீரிஸ், கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மற்றும் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் (கேலக்ஸி நோட் 10 லைட் தவிர) உள்ளிட்ட ஒன்பது ஸ்மார்ட்போன்களும் புதிய அப்டேட்டை பெறும்.



சாம்சங் கேலக்ஸி போல்ட் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஒன் யுஐ 3.0-க்கு புதுப்பிக்கப்படும்.

2021 மார்ச் மாதத்தில், சாம்சங் கேலக்ஸி எம் 30 எஸ், கேலக்ஸி ஏ 51, கேலக்ஸி நோட் 10 லைட், சாம்சங் கேலக்ஸி எம் 31, கேலக்ஸி எம் 21 மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 ஆகியவைகள் அப்டேட்டைப் பெறும்.

ஏப்ரல் 2021-இல் சாம்சங் கேலக்ஸி ஏ 50 மற்றும் கேலக்ஸி எம் 51 ஆகிய மாடல்கள் அப்டேட்டை பெறும்.

சாம்சங் கேலக்ஸி ஏ 70, கேலக்ஸி ஏ 80, கேலக்ஸி டேப் எஸ் 6, கேலக்ஸி ஏ 71, கேலக்ஸி ஏ 31, கேலக்ஸி ஏ 21 எஸ் மற்றும் கேலக்ஸி டேப் எஸ் 6 லைட் ஆகியவை அடுத்த ஆண்டு மே மாதத்தில் புதுப்பிக்கப்பட்டும்.

ஜூன் 2021 இல், சாம்சங் கேலக்ஸி டேப் ஏ, கேலக்ஸி ஏ 01 கோர், கேலக்ஸி ஏ 01, கேலக்ஸி ஏ 11 மற்றும் கேலக்ஸி எம் 11 ஆகியவை ஒன் யுஐ 3.0 அப்டேட்டைப் பெறும்.

சாம்சங் கேலக்ஸி ஏ 30 மற்றும் கேலக்ஸி டேப் எஸ் 5 இ ஆகியவைகள் ஜூலை 2021 இல் புதுப்பிக்கப்படும்.


பின்னர் சாம்சங் கேலக்ஸி ஏ 10 சீரிஸ், கேலக்ஸி ஏ 20 சீரிஸ், கேலக்ஸி ஏ 30 எஸ், கேலக்ஸி ஏ 10.1, மற்றும் கேலக்ஸி டேப் ஆக்டிவ் ப்ரோ ஆகியவை ஆகஸ்ட் 2021-இல் ஒன் யுஐ 3.0 க்கு புதுப்பிக்கப்படும்.

இறுதியாக, சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8 ஆனது செப்டம்பர் 2021-இல் நிறுவனத்தின் புதிய ஒன் யூஐ 3.0 அப்டேட்டைப் பெறும்.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக