
எர்ரோவ் (Arrow) நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இன்-இயர் நெக் பேண்ட் ஹெட்செட் மாடலான "BX90 Pro" மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எர்ரோவ் பிஎக்ஸ் 90 ப்ரோ நெக்பேண்ட் நம்ப முடியாத சிறப்பம்சங்களுடன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Arrow BX90 Pro வயர்லெஸ் இன்-இயர் நெக் பேண்ட் ஹெட்செட்
புதிய Arrow BX90 Pro வயர்லெஸ் இன்-இயர் நெக் பேண்ட் ஹெட்செட் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முன்னணி விற்பனை நிலையங்களிலும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயர்லெஸ் இன்-இயர் நெக் பேண்ட் ஹெட்செட் பச்சை, வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய 4 வண்ண விருப்பங்களில் வரும் ரூ,1299 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
90 மணிநேர பேட்டரி பேக்கப்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நெக் பேண்ட் ஹெவி பாஸுடன் தனித்துவமான சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது. BX90 Pro ஹெட்செட் சாதனம் 90 மணிநேர பேக்கப் நேரத்துடன் வருகிறது. இதன் வடிவம் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு காரணமாக, சாதனம் மிகவும் இலகுவானதாகவும் மற்றும் உங்கள் காதுகளில் வசதியாக அமரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
புளூடூத் வெர்ஷன் 5.0
BX90 Pro வயர்லெஸ் நெக் பேண்ட் எளிதாக உங்களின் ஸ்மார்ட்போன் மற்றும் பிற சாதனத்துடன் இணையும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உங்கள் சாதனத்துடன் புளூடூத் வெர்ஷன் 5.0 உடன் இணைக்க அனுமதிக்கிறது, இது 32 அடி (10 மீட்டர்) இடைவேளை தூரத்துடன் இணைப்பை வழங்குகிறது. இது 90 எம்ஏஎச் பேட்டரியுடன் 6 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குவதோடு, 1.5 மணிநேர சார்ஜிங் நேரத்தைக் கொண்டுள்ளது.
ரிச் பாஸ் எச்டி ஸ்டீரியோ சவுண்ட்
நெக் பேண்ட் ஹெட்செட் நாய்ஸ் கான்சலேஷன் மற்றும் மல்டி-பன்க்ஷனால் மற்றும் வால்யூம் / ட்ராக் கண்ட்ரோல் பட்டன்கள் போன்ற அம்சங்களுடன், ரிச் பாஸ் எச்டி ஸ்டீரியோ சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது. இது உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனைக் கொண்டுள்ளது மற்றும் கூகிள் வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் ஆப்பிள் சிரி அசிஸ்டன்ட் அம்சங்களையும் ஆதரிக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக