
ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த சேமிப்பு வசதி, பெரிய டிஸ்ப்ளே மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களோடு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் மாடல்
Transsion Indiaவின் துணை பிராண்டான ஐடெல் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான ஐடெல் ஏ47 மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசானில் ஸ்பெஷலாக கிடைக்கும் என தகவல்
ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் அமேசானில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அமேசானின் ஸ்பெஷலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அமேசானில் பிரத்யேகமாக கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறந்த பாதுகாப்பு வசதி
அமேசானின் பட்டியின்படி பார்க்கையில், ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்ப்ளே, சிறந்த சேமிப்பு வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. 32 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் பிரத்யேக மெமரி கார்டு ஸ்லாட் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் என தெரிகிறது. மேலும் பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புற கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
ஐடெல் நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் இந்தியாவில் ரூ.6,599-க்கு விஷன் 1 ப்ரோ மாடலை அறிமுகப்படுத்தியது. ஐடெல் விஷன் 1 ப்ரோ 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் வாட்டர் டிராப் 2.5டி வளைந்த முழு லேமினேட் டிஸ்ப்ளே, 1600 x 720 பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டுள்ளது.
2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி
அதோடு இந்த ஸ்மார்ட்போன் 1.4 GHz குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்டபோனில் 128 ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டிகார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது.
5 மெகாபிக்சல் செல்பி கேமரா
ஸ்மார்ட்போனில் ஏஐ டிரிபிள் கேமரா வசதி இருக்கிறது. இதில் 8 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் இரண்டு விஐஏ ஷூட்டர்கள் இருக்கிறது. அதோடு முன்பக்கத்தில் ஏஐ பியூட்டி பயன்முறையுடன் 5 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது.
இரட்டை பாதுகாப்பு அம்சம்
பாதுகாப்பு அம்சத்திற்கு ஃபாஸ்ட் பேஸ் அன்லாக், மல்டி ஃபீச்சர் கைரேகை சென்சார் ஆகிய இரண்டு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவுடன் இறுக்கிறது. இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
மொபைல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக