
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தனது ரீடைல் வர்த்தகத்தை ஜியோமார்ட் வாயிலாக விரிவாக்கம் செய்து வரும் நிலையில், தனது ரிலையன்ஸ் டிஜிட்டல் அதாவது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையே மேம்படுத்தக் குடியரசு தின சிறப்புத் தள்ளுபடி ஆஃபர் விற்பனையை அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் டிஜிட்டல் குடியரசு தினத்தை முன்னிட்டு வழக்கம் போல் ப்ரீ புக்கிங் ஆஃபர்-ஐ அறிவித்துள்ளது. இந்த முறை அதிகத் தள்ளுபடியும் இரட்டிப்பு லாபத்தைக் கொடுக்க முடிவு செய்துள்ளது.
தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவித்துள்ள படி ஜனவரி 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான ப்ரீ புக்கிங் காலகட்டத்தில் மக்களுக்குப் பிடித்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை 1000 ரூபாய் முன்பணம் கொடுத்து புக் செய்ய வேண்டும்.
அப்படிப் புக் செய்பவர்களுக்குக் கூடுதலாக 1000 ரூபாய் தள்ளுபடி கிடைப்பது மட்டும் அல்லாமல் உடனடி சலுகை மற்றும் சிறப்பு ஆபர்களும் ரிலையன்ஸ் டிஜிட்டல்-ன் 'டிஜிட்டல் இந்தியா சேல்' என்னும் சிறப்பு விற்பனையில் கிடைக்கும்.
இதேபோல் 2000 ரூபாய் முன்பணம் கொடுத்து புக் செய்வோருக்கு மாத தவணையில் அதாவது ஈஎம்ஐ-யில் கூடுதலாக 2000 ரூபாய் தள்ளுபடியும் உண்டு. இந்தச் சலுகை அனைத்தும் ஜனவரி 22 முதல் 26ஆம் தேதி வரையில் நடக்கும் 'டிஜிட்டல் இந்தியா சேல்' சிறப்பு விற்பனையில் கிடைக்கும்.
இதேபோல் நாட்டின் முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கொடுக்கும் சிறப்பு ஆஃபர்களும் இந்த 'டிஜிட்டல் இந்தியா சேல்' விற்பனையில் கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் 3000 ரூபாய்க்கும் அதிகமாகத் தள்ளுபடியைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மக்கள் இந்த ஆபர்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் மட்டும் அல்லாமல் www.reliancedigital.in இணையதளத்திலும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இணையத்தில் புக் செய்த பொருட்களை மக்கள் நேரடியாகக் கடைகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.
இல்லையெனில் நேரடியாக வீட்டிற்கே பொருட்களை டெலிவரி பெற கூடிய வசதிகளும் உள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் டிஜிட்டல் சுமார் 800 நகரங்களில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக