-------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!
-------------------------------------
மனைவி : உங்கள கல்யாணம் பண்ணி நான் வேலைக்காரி ஆயிட்டேன்.
கணவன் : அது எப்படி? பாத்திரம் நான் தேய்கிறேன்... வீட்ட நான் பெருக்கறேன்... சாப்பாடு நான் பண்றேன்... துணியும் நான்தான் துவைக்கிறேன்... நீ எப்படி வேலைக்காரி ஆவ?
மனைவி : பின்ன என்ன? வேலைக்காரனோட பொண்டாட்டி வேலைக்காரி தான...
கணவன் : 😠😠
-------------------------------------
பாபு : உன்னை எதுக்குடா மேனேஜர் அசிங்கமா திட்டிட்டு போறாரு?
கோபு : அதுவா... அவர் வீட்டு நாயை காணோமாம்.
பாபு : அதுக்கு ஏன்டா உன்ன திட்டுறாரு?
கோபு : நியூஸ் பேப்பர்ல நாயை காணவில்லை-ன்னு விளம்பரம் கொடுக்க சொன்னாரு...
பாபு : ஏன் நீ மேனேஜர் சொன்னமாதிரி செய்யலியா?
கோபு : பேப்பர்ல மேனேஜரின் நாய் காணவில்லை-ன்னு போடுறதுக்கு பதிலா மேனேஜர் நாயை காணவில்லை-ன்னு போட்டுட்டேன்.
பாபு : 😆😆
-------------------------------------
பொன்மொழிகள்...!!
-------------------------------------
வாழ்க்கைக்கு வழிதேடு... வாய்ப்புகள் வந்து சேரும்...
பயிற்சியை பாடமாக்கு... பட்டங்கள் பரிசளிக்கும்...
தடைகளை தகர்த்தெறி... தன்னம்பிக்கை தலைதூக்கும்...
முயற்சியை முதிர்ச்சியாக்கு... முன்னேற்றம் முடிசூடும்...
விவேகத்தை விதையாக்கு... வெற்றிகள் விழாக்காணும்...
-------------------------------------
குட்டிக்கதை...!!
-------------------------------------
முதலாளிக்கும், முட்டாள் தொழிலாளிக்கும் நடந்த ஒரு நகைச்சுவை நிகழ்வு...
முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கி வர சொன்னார்.
கண்ல போடுற கண்ணாடியான்னு கேட்டதும் முதலாளி கோபத்தில்...
யோவ் ஷேவ் பண்றதுக்குய்யா... என் முகம் தெரியுற மாதிரி ஒன்னு வாங்கிட்டு வா... என்று அனுப்பி வைத்தார்.
வேலைக்காரன் திரும்பி வரவே இல்லை... நீண்ட நேரத்திற்கு பின் மூச்சுவாங்க வெறுங்கையோடு வந்த வேலைக்காரனிடம் ஏன் கண்ணாடி வாங்கலன்னு? கேட்டார் முதலாளி...
பஜார் முழுக்க அலைஞ்சேன் முதலாளி... ஆனாலும் நீங்க கேட்ட மாதிரி கண்ணாடி கிடைக்கல அதுதான் வாங்கல.
ஏன்... பெருசாவா இருந்துச்சு?
இல்ல, சின்னதாதான் இருந்துச்சு...
அப்புறம் ஏன் வாங்கல?
எல்லா கண்ணாடியிலும் என் முகம்தான் தெரிஞ்சிது. அதான் வாங்கல...😎😊

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக