இந்தியாவின் இ-காமர்ஸ் அன்னிய முதலீட்டு விதிகளில் மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இதனால் முன்னணி ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானுக்கு சற்று பிரச்சனை தான் என்றும் கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகார்களுக்கு மத்தியில் அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மீறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றது.
நாட்டில் வர்த்தகம் செய்யும் இரண்டு பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் அந்நிய முதலீடு குறித்து அமலாக்க இயக்குநரகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி விசாரிக்க அரசு அவர்களுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இது குறித்து அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (கேட்) அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை மற்றும் ஃபெமா விதிகளை மீறுவது குறித்து பல புகார்களை அளித்தது. இதன் பின்னரே அரசாங்கம் இப்படின் ஒரு நடவடிக்கையினை எடுத்தது.
இதற்கிடையில் தான் இந்த விதிகள் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்தியா இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு வாங்குபவர்களையும், விற்பவர்களையும் இணையக்க சந்தையாக செயல்பட அனுமதிக்கிறது. இது சரக்கு மொத்தமாக வைத்திருப்பதையும், அவற்றை நேரடியாக விற்பனை செய்வதையும் தடை செய்கிறது.
கடைசியாக கடந்த டிசம்பர் 2018 நேரடி முதலீட்டு விதிகளால் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. தற்போது புதியாக கொண்டு வரப்படும் விதிகள் மூலம் இன்னும் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அமேசான் தனது மிகப்பெரிய ஆன்லைன் விற்பனையாளர்களின், இருவருக்கு மறைமுக பங்குகளை வைத்திருப்பதால், தொடர்ந்து முதலீடுகள் கேள்விக் குறியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக