>>
  • 21-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில்
  • >>
  • 20-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இந்திரன் சாபம் நீங்கிய பாகசாலை புரந்தரேஸ்வரர் ஆலயம் – நாகை
  • >>
  • 18-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உங்க மூளை உங்க கண்ட்ரோல்ல இல்லையா? ஜாக்கிரதை
  • >>
  • பாப்பான்குளம் திருவெண்காடர் சிவன் கோவில் – அற்புதத் திருத்தலம்
  • >>
  • 17-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மூட்டுவலிக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள்
  • >>
  • திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 20 ஜனவரி, 2021

    இந்த ஓட்டல்ல கறியும், மீனும் வெளுத்து கட்டினா, ராயல் என்ஃபீல்ட் பைக் பரிசாம்!

     


    மட்டனும், மீன் கறியும் அதிரடியாக சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான ராயல் என்ஃபீல்ட் பைக் பரிசாக வழங்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலம் புனேவின் புறநகர்ப் பகுதியான வத்கோவன் மாவல் ஏரியாவில் அமைந்துள்ளது சிவாஜி ஓட்டல். இங்கு கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட இழப்பை அடுத்து, வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் ’புல்லட் பரிசு போட்டி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 60 நிமிடத்தில் அசைவ உணவை சாப்பிட்டு முடிக்க வேண்டும். இதற்கு ’

    புல்லட் தாலி’ (Bullet Thali) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் 4 கிலோ மட்டனும், சிக்கனும் அடங்கும். மேலும் ஃப்ரைட் சுர்மாய், பாம்ஃபெரட் ஃப்ரைட் பிஷ், சிக்கன் தந்தூரி, ட்ரை மட்டன், க்ரே மட்டன், சிக்கன் மசாலா, பிரான் பிரியாணி உள்ளிட்டவையும் இருக்கின்றன.

    இதன் விலை 2,500 ரூபாய் ஆகும். இதை உரிய நேரத்தில் சாப்பிட்டு முடித்துவிட்டால் 1.65 லட்ச ரூபாய் மதிப்பிலான ராயல் என்ஃபீல்ட் பைக் பரிசாக வழங்கப்படும். இதுதொடர்பாக உணவகத்தின் முன்பு விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மெனுவில் இருக்கும் உணவுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

    மேலும் புத்தம் புதிய ராயல் என்ஃபீல்ட் பைக்கை சிவாஜி ஓட்டல் வளாகத்தில் அதன் உரிமையாளரான அடுல் வைக்கார் நிறுத்தி வைத்திருக்கிறார். இந்த விளம்பரத்தை பார்த்து ஏராளமான வாடிக்கையாளர்கள் ஓட்டலுக்கு படையெடுத்து வந்துள்ளனர். பலரும் போட்டியில் பங்கேற்றனர்.

    இந்த சூழலில் மகாராஷ்டிர மாநிலம் சோலாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோம்நாத் பவார் என்ற நபர் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் புல்லட் தாலியை சாப்பிட்டு போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ராயல் என்ஃபீல்ட் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

    இதற்கு முன்பு 8 கிலோ ராவண் தாலியை 60 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் 5,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும். மேலும் சாப்பிட்டதற்கு பணமும் கொடுக்க வேண்டும் என்று கவர்ச்சிகர அறிவிப்பை சிவாஜி ஓட்டல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் புனேவில் புதிய ட்ரெண்டை இந்த ஓட்டல் உண்டாக்கி இருக்கிறது.

     குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
    இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக